லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !

Bookmark and Share

லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம்  'சிண்ட்ரல்லா'   !

உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட் ரல்லா . இப்பாத்திரம்  தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது.

லட்சுமி ராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர்  எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவின் மாணவர் வினோ வெங்கடேஷ். படத்தைத் தயாரிப்பது எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் . இவர்கள் திரையரங்கு, 100க்கும் மேற்பட்ட திரைப்பட விநியோகம் திரை அனுபவம் பெற்றவர்கள்.

படம் பற்றி இயக்குநர்  வினோ வெங்கடேஷ் கூறும் போது,

"இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும். படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. அதன் மீது ஈர்ப்பு வந்தது.

தயாரிப்பாளர் தயாரிக்க முன் வந்தார். அவரும் தலைப்பு பிடித்து தான் கதை கேட்டார். நடிகை லட்சுமிராய்க்கு  படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான் போய்ப் பார்த்தோம்.

சாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார். நாங்கள் அனுப்பியிருந்த கதைச் சுருக்கம், குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார், கதையைக் கேட்டு விட்டு  சம்மதம் கூறினார்.

மேலும் ஒரு வார அவகாசத்தில் சில விளக்கங் கள் கேட்டார். தெளிவு பெற்றார். இப்போது முழுமையாக 'சிண்ட்ரல்லா'வுக்குள்  புகுந்து விட்டார் " என்று கூறினார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா?
”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions