மாரி முதல் நாள் வசூல் எப்படி ?

Bookmark and Share

மாரி முதல் நாள் வசூல் எப்படி ?

தனுஷ் நடித்துள்ள படத்திற்கும் இப்படிப்பட்ட ஒரு வரவேற்பா என மாரி படத்தின் முதல் நாள் வசூல் ஆச்சரியப்படவே வைத்திருக்கிறது. படம் வெளியாகியுள்ள ஒவ்வொரு திரையரங்கிலும் அவரது ரசிகர்கள் பேனர்களை வைத்து அமர்க்களப்படுத்தியிருந்தார்கள்.

வாலு படம் நேற்று திட்டமிட்டபடி வெளிவராத நிலையில் எந்த ஒரு போட்டியுமே இல்லாமல் தனியாளாக தனுஷ் வந்திருக்கிறார். வேறு எந்தப் புதுப்படமும் இல்லாததால் வெள்ளிக்கிழமை வெளியாகும் புதுப் படங்களை அன்றே பார்க்கும் ரசிகர்கள் நேற்று  மாரி திரையரங்கிற்குள் நுழைந்துள்ளனர்.

படத்தின் கதை கொஞ்சம் ஆடுகளம் கொஞ்சம் புதுப்பேட்டை என கலந்து அமைக்கப்பட்டிருந்தாலும், அந்த இரண்டு படங்களின் தரத்தை துளி கூட நெருங்க முடியாத அளவிற்கு மிகவும் சாதாரணமாக படமாக்கப்பட்ருக்கிறது என பெரும்பாலான ரசிகர்கள் கருதுகின்றனர்.

இருந்தாலும் தனுஷ் அவருடைய நடிப்பால் தனியாளாகவே படத்தை தூக்கி நிறுத்த முயற்சித்திருக்கிறார். படத்தில் அவரது வலது கரமாக நடித்திருக்கும் ரேபோ சங்கரை விட இடது கரமாக நடித்திருக்கும் வினோத் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள்.

படத்தில் தனுஷ் வரும் காட்சிகள் எல்லாவற்றிலும் புகை பிடிப்பதன் எச்சரிக்கை வாசகம் வந்து கொண்டிருக்கிறது. அப்படி புகைத்துத் தள்ளியிருக்கிறார் தனுஷ்.

இந்த எச்சரிக்கை தனுஷ் புகை பிடிக்கும் காட்சிக்கு மட்டுமல்ல, தனுஷின் இந்த மாரி படத்திற்கும் பொருந்தும் என்கிறார்கள் விமர்சகர்கள். தனுஷ், கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் உஷாராய் இருப்பதே நல்லது...இருந்தாலும் நேற்றைய முதல் நாள் வசூல் தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.


Post your comment





Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions