மாரி 50 கோடி வசூலா ?

Bookmark and Share

மாரி  50 கோடி வசூலா ?

மாரி  படம் வெளியாகி ஒரு வாரம்தான் முடிந்திருக்கிறது, அதற்குள் படம் 50 கோடி ரூபாய் வசூலை அள்ளி விட்டது, அள்ளி விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளரிலிருந்து படத்தில் நடித்துள்ள தனுஷ் முதல் சிறு வேடத்தில் நடித்துள்ளவர்கள் வரை இடைவிடாமல் படம் வெற்றி வெற்றி என  பாபநாசம்  பட பாணியில் ஒரே மாதிரியாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மாரி  படம் சம்பந்தமாக வெளியாகும் வசூல் நிலவரங்களைப் பார்த்து வினியோகஸ்தர்களே ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார்களாம். படம் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருப்பது என்னமோ உண்மைதான், ஆனால், அவர்கள் சொல்வது போல 50 கோடியெல்லாம் வசூலிக்கவில்லை என்கிறார்கள். வேறு எந்தப் படமும் போட்டியிடாத அளவிற்கு சரியாக காய்களை நகர்த்தி தாங்கள் மட்டுமே வருவது போல பார்த்துக் கொண்டார்கள்.

அது மட்டுமல்ல யாருமே இல்லாத களத்தில் நின்று ஜெயிப்பது பெரிய விஷயமில்லை. அவர்களுக்குத் தெரிந்த அரசியல் மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்கிறார்கள் சில வினியோகஸ்தர்கள்.

படத்திற்கு எதை செய்கிறார்களோ இல்லையோ நன்றாக மார்க்கெட்டிங் செய்து எல்லா பக்கமும் படத்தைப் பற்றி பேச வைக்கும் விஷயத்தை மட்டும் சரியாகச் செய்கிறார்கள் என்ற தகவலும் உண்டு.

அதன் ஒரு பகுதியாக தனுஷ் தங்கச் சங்கிலி அணிவித்ததையும் சொல்கிறார்கள். மும்பை பக்கம் சென்ற பின் தனுஷ், நடிக்கிறார்ரோ இல்லையோ நன்றாக இல்லாத படத்தைக் கூட எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்ற வித்தையைக்  கற்றுக் கொண்டுவந்திருக்கிறார் என்கிறார்கள். 

 


Post your comment





Related News
ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்!
தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!
அசுரனில் விஜய் சேதுபதி? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions