அரசியல் வாதியிடம் ஏமாறும் கதையை சொல்லும் மதுரை மாவேந்தர்கள்

Bookmark and Share

அரசியல் வாதியிடம் ஏமாறும் கதையை சொல்லும் மதுரை மாவேந்தர்கள்

‘நேற்று இன்று’, ‘இரவும் பகலும்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஆர்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தணிகைவேல் தயாரிக்கும் படம் ‘மதுரை மாவேந்தர்கள்’. இதில் அஜய், அர்ச்சனா, அப்புக்குட்டி, காதல் சுகுமார், தேவதர்ஷினி, விஜய்ஆனந்த், பாண்டு. பூவிலங்கு மோகன், நெல்லை சிவா, கிருஷ்ணமூர்த்தி, வெங்கல்ராஜ், கவர்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.கே.விஜய்கண்ணா இயக்குகிறார். பைஜூ ஜாக்கப் இசையமைத்திருக்கிறார். குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் உள்ள ஒருவர் தன் மகள் திருமணத்துக்காக வீட்டை விற்று வைத்திருந்த பணத்தை ஒரு அரசியல்வாதியிடம் கொடுத்து ஏமாந்து விடுகிறார். அந்த பணத்தை நாயகனும் அவனது நண்பர்களும் எப்படி மீட்டு எடுத்தார்கள் என்பது கதை. முழு காமெடி படமாக தயாராகி வருகிறது.

இப்படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. இதில் ஒரு பாடல் காட்சி கோவளம் கடற்கரையில் உள்ள சிறு மணல் தீவில் படமாக்கப்பட்டு உள்ளது. அந்த தீவுக்கு படகில் செல்லும் போது எந்திர கோளாறு ஏற்பட்டு படகு தத்தளித்தது. இதை பார்த்து நாயகி மயங்கி விழுந்தார். மீட்புகுழுவினர் வந்து படகை சரி செய்து அனைவரையும் மீட்டனர்.

இன்னும் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட்டவுள்ளது. படத்திற்கான காட்சிகளை 45 நாட்களிலேயே முடித்தோம். ஜூன் மாதம் இப்படத்தை வெளியிடவுள்ளோம். ஜூன் முதல் வாரத்தில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளோம் என்றார். 


Post your comment

Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்
19 ரூபாயில் தியேட்டரில் படம் பார்க்கலாம்... எப்படி? இதப் படிங்க!
தர்மதுரை வெற்றியைத் தொடர்ந்து சீனு ராமசாமி எடுத்த முடிவு!
RSSS Pictures S. தணிகைவேல் வழங்கும் “மதுரை மா வேந்தர்கள்”
மதுரக்காரங்க ரொம்ப பாசக்காரங்க: லட்சுமி மேனன்.!
மதுரையை ரத்தகளமாக காட்டவேண்டாம்: பாரதிராஜா..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions