மகேஷ் பாபுவிற்கு பூரி ஜெகன்நாத் வாழ்த்து

Bookmark and Share

மகேஷ் பாபுவிற்கு பூரி ஜெகன்நாத் வாழ்த்து

டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளிவரவுள்ள ஸ்ரீமந்துடு படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிகர் மகேஷ் பாபு, நடிகை ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் மகேஷ் பாபு உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த பூரி ஜெகன்நாத் மகேஷ் பாபு ஒரு கடின உழைப்பாளி, நடிப்பில் அவருக்குள்ள அர்ப்பணிப்பு என்னை பலமுறை பிரமிக்க வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் மகேஷ் பாபு உள்ளிட்ட ஸ்ரீமந்துடு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த பூரி ஜெகன்நாத் தானும் ஸ்ரீமந்துடு படத்தை திரையில் காண ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

மகேஷ் பாபு மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் கொரடலா சிவா இயக்கியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions