ஸ்ரீமந்துடு டப்பிங்கில் பிசியான மகேஷ் பாபு

Bookmark and Share

ஸ்ரீமந்துடு  டப்பிங்கில் பிசியான மகேஷ் பாபு

டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபு தயாரித்து நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தை மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்குகின்றார். இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகின்றார்.

ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்பட வெளியீடு பாகுபலி படத்தின் வெளியீட்டால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைபாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

குறிப்பாக பாடல்கள் குறித்த படப்பிடிப்புகள் மட்டுமே தற்போது நடைபெறுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மகேஷ் பாபு இப்படத்தில் தனக்கான டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்தில் நடிகை சுகன்யா மற்றும் நடிகர் கெஜபதி பாபு ஆகியோர் மகேஷ் பாபுவிற்கு அம்மா அப்பாவாக நடித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார்.


Post your comment





Related News
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions