தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா

Bookmark and Share

தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அண்ணனுக்கு ஜே. அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜ்குமார், “இப்படத்திற்குப் பக்கபலமாக இருந்த வெற்றிமாறனுக்கு நன்றி. நடிகர் தினேசுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன். மகிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார்.

மயில்சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்போதும் நகைச்சுவை நடிகர்களாகப் பல படங்களில் நடித்து இருப்பார்கள். இந்தப் படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்” என்று கூறினார்.

மகிமா நம்பியார் பேசும்போது, தான் டப்பிங் பேசி நடித்ததைக் குறிப்பிட்டார். “வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தப் படத்தில் ‘தர லோக்கல்’ கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்” என்று கூறினார். உள்ளூர் அரசியலை பேசி இருக்கிறோம். இந்த கதையை 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் கூறினார்.

ஆனால் இன்றுவரை அந்த கதை புதிதாகவே இருக்கிறது. காரணம் யாரும் அதிகம் தொடாத அரசியல் களம்’ என்றார்.  அரோல் கரோலி இசை அமைக்க விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.


Post your comment





Related News
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
பாகுபலி மற்றும் பல பிரமாண்ட படங்களின் விநியோகிஸ்தர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்
பிரதாப் போத்தன் மீது புகார் கொடுத்தார் ஜெயராம்!
ரோமியோ ஜூலியட் வெற்றியை அறுவடை செய்யும் படம் எது?
தமிழ்த் திரையுலகின் டிசம்பர் இசை சீசன்
சிம்பு படத்தைவிட ஜெயம் ரவிக்கு தாராளம்: ஹன்சிகா பாரபட்சம்..!
குணசித்திர நடிகர் ஜெயப்பிரகாஷ் தமிழ் சினிமாவில் நடிக்க தடை..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions