மணிரத்னம் படத்தின் பெயர் கோமாளி?

Bookmark and Share

மணிரத்னம் படத்தின் பெயர் கோமாளி?

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்தியும், மம்முட்டியும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற ஒரு தகவலும், கார்த்தியும், துல்கல் சல்மானும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற மற்றொரு தகவலும் கோலிவுட்டில் பரவி வருகிறது. நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்றும் சொன்னார்கள்.

மகேஷ்பாபு, நாகார்ஜுனா நடிக்கப் போவதாக இருந்த படத்தில்தான் இப்போது இவர்கள் நடிக்கப் போகிறார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அது பற்றி வாயே திறக்கவில்லை.

ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியுடன் இருக்கும் மணிரத்னம் விரைவில் புதிய படத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள்.

இதற்கான கதையைக் கூட அவர் ஏற்கெனவே தயார் செய்து விட்டாராம். இந்தப் படத்திற்கு கோமாளி என்ற பெயரிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், மணிரத்னம் படத்தைப் பொறுத்தவரையில் ஒரு புகைப்படம் வெளிவருவது கூட சிதம்பர ரகசியமாகவே இருக்கும். அவர் படம் பற்றி தகவல் கசியும் அனைத்து வழிகளையும் அவர் இரும்புக்கரம் கொண்டு தடுத்து வைத்திருப்பார். எப்படியும் சீக்கிரம் அறிவிப்பு வரும் என்று மட்டும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
பொன்னியின் செல்வன் படத்துக்காக இப்படியெல்லாம் செய்கிறாரா விக்ரம் – அசத்தல் தகவல்!
பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பாகுபலிக்கு சவால்விடும் மணிரத்னம்!
மணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் - ஸ்வாதிஷ்டா
மணிரத்னத்தின் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தால் உருவான அமுதா!
மணிரத்தினம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்த சிம்பு - ஆட்டம் ஆரம்பம்.!
மணிரத்னம் பட ஷூட்டிங்கில் கட்ட பஞ்சாயத்து, சிம்பு குற்றசாட்டு - வீடியோ உள்ளே.!
மணிரத்தினம் படத்தில் இருந்து விலகும் மெகா ஹிட் நடிகர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மணிரத்தினம் படத்தில் இணைந்த பிரபல நடிகை - குஷியான நடிகை.!
20 வருடங்களுக்கு பிறகு இணையும் மணிரத்தினத்தின் ஹிட் பட நடிகர்கள் - எகிறும் எதிர்பார்ப்பு.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions