மக்களுக்காக ஒற்றை மனிதனாக மலையைக்குடைந்து சாலையமைத்த அற்புத மனிதரைப் பற்றிய திரைப்படம்

Bookmark and Share

மக்களுக்காக ஒற்றை மனிதனாக மலையைக்குடைந்து சாலையமைத்த அற்புத மனிதரைப் பற்றிய திரைப்படம்

சினிமா ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் ஒரு சேர எதிர்பார்த்த, மலை மனிதரைப் பற்றிய திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. சமீபத்தில் வெளியான அந்தப் படத்தின் டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பு ஒன்றே போதும் மக்களுக்காக உழைக்கும் மனிதன் அந்த குறிப்பிட்ட மக்களின் மனதில் மட்டுமின்றி, உலக மக்கள் அனைவரின் மனதிலும் எப்படி சிம்மாசனமிட்டு அமர்கிறான் என்பதை நிரூபிக்க....

பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற சிற்றூர், மலையின் மறுபுறத்தில் உள்ள குடிசைகளில் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களைக்கொண்டது. இவர்கள் குடிநீருக்காக மலையின் மறுபக்கம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். இந்த சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் கூலியான தசரத் மான்ஜி, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்.

1959 ஆம் ஆண்டில் இவருடைய மனைவி பால்குனி தேவி மலையின் மறுபக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும்போது மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார்.

கெலார் பகுதியை சுற்றியுள்ள சிற்றூர்களில் அவசர உதவிக்குக் கூட மருத்துவ உதவி கிடைக்காத சூழலில் 80 கி.மீ தூரத்தில் உள்ள வஜீரகஞ்ச் மருத்துவமனையையே நம்பியிருக்க வேண்டிய நிலையில், மருத்துவ மனைக்குச் செல்லும் போதே இவருடைய மனைவி இறந்து போனார்.

தனது மனைவியைப் போல அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் இறக்கக் கூடாது எனக் கருதிய மான்ஜி தனியொரு ஆளாக சுத்தியலும் உளியுமாகக் களத்தில் இறங்கினார்.

இயற்கைச் சீற்றங்கள், உடல் நலிவு என எத்தனையோ இன்னல்களுக்கிடையில் 1959 முதல் 1981 வரை 22 வருடங்கள் கடுமையாக உழைத்து, 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் ஒரு புதிய பாதையை இவர் உருவாக்கினார். அதுவரை 80 கி.மீ. மலையினைச் சுற்றிச் சென்றடைய வேண்டிய வஜீரகஞ்ச் இவரது அசுர உழைப்பின் பலனால் வெறும் 13 கி.மீ. தூரமானது. இதனால் அம்மலையைச் சுற்றியுள்ள 60 கிராம மக்களும் பயனடைய முடிந்தது.

தனது மனைவி மீதான காதல் தான் இந்தப் பெரும் பணியைச் செய்து முடிக்கும் சக்தியைக் கொடுத்தது. அதோடு ஆயிரக்கணக்கான மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறும் மான்ஜியின் பெயர் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட போது இந்திய அரசு "அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறியது. 

ஆனால், அரசு விருது கொடுக்கும் என்பதற்காக நான் இதை செய்யவில்லை என இதனைப் பொருட்படுத்தாத மான்ஜி, பீகார் அரசு தனக்கு இலவசமாக வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தையும் தனது கிராமத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக வழங்கி விட்டார்.

தனது வாழ்வின் கடைசி நாட்களில் பித்தப்பை புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்தபோதுதான் அரசின் பார்வை இவர் மீது திரும்பியது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மான்ஜி அனுமதிக்கப்பட்டார்.

புற்றுநோய் சிகிச்சைக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக மாநில அரசு அறிவித்தபோதும், நோயின் தீவரம் காரணமாக 18-8-2007 அன்று மான்ஜியின் உயிர் பிரிந்தது. ரெயில் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்ட மான்ஜியின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

உழைப்பால் எழுதப்பட்ட இவரது வெற்றி சரித்திரம் கேட்டன் மேத்தா இயக்கத்தில் 'Mountain Man' என்ற பெயரில் இந்தியில் திரை சித்திரமாக தயாராகி, வருகிற ஆகஸ்ட் 21-ம் தேதி அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. 


Post your comment

Related News
இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
அஜித்தை கவர்ந்த படம்
விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ராஷ்மிகா
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
உதயநிதியின் அடுத்த படம் கண்ணை நம்பாதே
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions