மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்

Bookmark and Share

மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன், தற்போது கவுதம் கார்த்திக் ஜோடியாக தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடைபெற்று வருவதை எதிர்த்து மீ டூ இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கம் வந்த பின் திரைத்துறையில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த மஞ்சிமா, “ எனக்கு இது பற்றி தெரியாது. இது போன்ற சம்பவங்களை நான் அனுபவித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

இவர்களில் சிலரது அனுபவங்கள் நம்பக்கூடியதாகவும், சிலரது குற்றசாட்டுகள் நம்ப முடியாத அளவிலும் உள்ளன. ஆனால் இதைக் கேட்ட போது பெரும் கொந்தளிப்பே உருவானது” என்று கூறியுள்ளார். இந்தியில் வெளியான குயின் படம் ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் மலையாளத்தில் ஸம் ஸம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. அதில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்குவர உள்ளது. 


Post your comment





Related News
பிரபல நடிகையிடம் படப்பிடிப்பில் சில்மிஷம் செய்து சிக்கிய பிரபல நடிகர்! உண்மை அம்பலம்
மீ டூ.. அஜித் அப்போ சொன்னது இப்போ பலிச்சிடுச்சு!
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பிரபல நடிகையின் ஆசை, அஜித் நிறைவேற்றுவாரா?
டிடியின் இந்த வார கெஸ்ட் யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions