15 நாளில் உருவான மான் வேட்டை

Bookmark and Share

15 நாளில் உருவான மான் வேட்டை

‘தீ நகர்’, ‘அகம் புறம்’ ஆகிய படங்களை இயக்கிய திருமலை தற்போது இயக்கியிருக்கும் படம் ‘மான் வேட்டை’. இதில் ஷரண் நாயகனாகவும் சுனிதா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் தேஜஸ், பிரியா, பிரதீப், மாயா, சுமன் ஷெட்டி, வனிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். விஜய் வல்சன், ரதீஷ் கண்ணா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். கிருஷ்ண குமார், கமலக்கண்ணன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தை திகில் நிறைந்த திரில்லர் படமாக இயக்கியிருக்கிறார் திருமலை. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

மேலும் இப்படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, இப்படத்தில் நான்கு ஜோடிகள் வார விடுமுறையை கொண்டாட ஒரு மலைக்கு செல்கிறார்கள். அங்கு ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறக்கிறார்கள். இதில் கடைசியாக ஒருவர் மட்டும் மிஞ்சுகிறார். அந்த மலையில் என்ன நடக்கிறது? இவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பதை சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறேன்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் 15 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறேன். ஒரு கோடிக்கும் குறைவாகவே இப்படத்தை எடுத்திருக்கிறேன். மலை சம்மந்தப்பட்ட படம் என்பதால் கொடைக்கானல், கோனய் நீர்வீழ்ச்சி, தலக்கோணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளேன். படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.

படத்தின் கதை 2 இரவுகளில் நடக்கும் வகையில் அமைத்திருக்கிறேன். படத்தின் முதல் காப்பி ரெடியாகிவிட்டது. மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார். 


Post your comment

Related News
இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions