'மன்னர் வகையறா'வை தொடர்ந்து விமலின் அடுத்த படம்!

Bookmark and Share

'மன்னர் வகையறா'வை தொடர்ந்து விமலின் அடுத்த படம்!

திருட்டு விசிடி முன்கூட்டியே வெளிவந்தும் 'மாப்ள சிங்கம்' திரைப்படம் தமிழக திரையரங்குகளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்தது.

நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தால் வசூல் சக்கை போடு போடும் என்பதற்கு தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் உதாரணமாகும்.இவரது நடிப்பில் வெளிவந்த 'காவல்' திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் தமிழக திரையரங்குகள் மூலம் கிடைத்த வசூல் மட்டும் 1.5 கோடி.இந்நிலையில் சரிந்து விழுந்த தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்தும் வகையில் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் 'மன்னர் வகையறா' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார் விமல்.

தன்னுடைய சொந்தப் படமாக இருந்தாலும் தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு ஆனந்தி, பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, வம்சி கிருஷ்ணா, கார்த்திக், நீலிமா ராணி, ஜெய பிரகாஷ், என நட்சத்திரப் பட்டாளங்களை உடன் வைத்து கொண்டு பயணம் செய்கிறார்.

இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதிப் படத்தை முடிப்பதற்கு நன்கு திட்டமிட்டு டிசம்பர் 12 முதல் படப்பிடிப்பை நடத்த ஆயத்தமான நிலையில் வர்தா புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. டிசம்பர் 12 அன்று எஸ்ஆர்கே பொறியியல் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்த இருந்த நிலையில் புயலால் மரங்கள் விழுந்து விட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'மாப்ள சிங்கம்' படத்திற்கு பிறகு 'மன்னர் வகையறா' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகே அடுத்த படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்திருந்த நடிகர் விமல் 'மன்னர் வகையறா' திரைப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்து வரும் காட்சிகள் பெருமளவில் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த காலதாமதமாகி வருவதால் நடுவில் ஒரு சிறிய படத்தை முடித்து விடத் திட்டமிட்டுள்ளார்.

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'துருவங்கள் பதினாறு' பாணியில் குறும்பட இயக்குநர் தரண் சொன்ன கதை பிடித்து போனதால் அந்த கதைக்கு ஓகே சொல்லியவர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேதி கொடுத்துள்ளார்.'துருவங்கள் பதினாறு' படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய ஜாக்ஸ் மீண்டும் இந்த த்ரில்லர் படத்தில் கலக்க உள்ளார்.

நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.இந்த படத்தை மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.மார்ச் முதல் வாரத்தில் படத்தை தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.


Post your comment

Related News
விமலின் விபரீத முடிவுக்கு பயந்த இயக்குனர் பூபதி பாண்டியன்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
பொங்கல் ரேசில் களமிறங்கும் விமல்
தமிழ்க் கலாசாரம் கற்றுக்கொடுக்கும் - ஸ்காட்லாந்த் நடிகர்.
அப்புக்குட்டியால் பட வாய்ப்புக்களை இழந்தேனா?- நடிகை சுவாதி!
த‌ன் மகன்களால் வருந்தும் கங்கை அமரன்-மன்னாரு இசை வெளியீட்டில்!
அப்புக்குட்டி நடிக்கும் அடுத்த படம் !
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions