மதிப்பெண் - ஐ.ஏ.எஸ். படிக்கும் மாணவனின் கதை

Bookmark and Share

மதிப்பெண் - ஐ.ஏ.எஸ். படிக்கும் மாணவனின் கதை

ஒரு நடுத்தர ஆசிரியரின் மகனான இளங்கோ, தன் ஊர்த் தலைவரின் சாதி வெறியை அடக்கி ஒழிக்க, தான் தாயின் சபதத்தின்படி, ஐ.ஏ.எஸ். படிக்க சென்னைக்கு வருகிறான். அவனின் அறிவாற்றலை அறிந்து கொண்ட நாயகி தாமரை, அவன் ஐ.ஏ.எஸ். ஆவதற்கு வேண்டிய பல உதவிகள் செய்கிறாள். அவர்களுக்கு இடையே நட்பு அரும்பி, நாளடைவில் அது காதலாக மாறுகிறது. பிறகு, அவன் மாவட்ட ஆட்சியாளராக மைசூரில் பணி ஏற்கிறான்.

தாமரையை ஏற்க விரும்பி சென்னையில் திருமண நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்ய சொல்கிறான் இளங்கோ. ஆனால், அதற்கு அவன் சொன்னபடி செல்லவில்லை. அவன் ஏன் வரவில்லை. அவனுக்கு ஏற்பட்ட விபரீதங்கள் என்ன என்பதை பல திருப்பங்களுடன் சுவராஸ்யமாக சொல்லும் கதை இது.

பாண்டியன் கலைக்கூடம் சார்பில், பேராசிரியர் இரா.சோதிவாணன் கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே வெளிவந்த ‘நிழல் சுடுவதில்லை’, ‘இப்படிக்கு என் காதல்’ போன்ற படங்களை தயாரித்தவர். மேலும், இவர் ‘ஒற்றையடிப் பாதை’, ‘ஈர விழிகள்’, ‘நெருப்புக் கோடுகள்’, ‘ஒரு விடியலின் முகம்’, ‘பாண்டியன் பாவை’, ‘தென்றலரசி’, ‘திருக்குறள் தென்னவன்’, ‘வேலப்பாடி வேல் விழி’ போன்ற நூல்களை எழுதியுள்ளார். இதில் ‘பாண்டியன் பாவை’ நூல் தமிழக அரசின் பரிசு பெற்றுள்ளது.

‘அம்புலி’, ‘ஆ’ படங்களில் கதாநாயகனாக நடித்த ஸ்ரீஜித், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க, நேகா, அமிர்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர். மேலும் லிவிங்ஸ்டன், இயக்குனர் ‘சங்கர் குரு’ ராஜா, இயக்குனர் நாராயணமூர்த்தி, சேரன் ராஜ், ‘கும்கி’ அஸ்வின், நாஞ்சில் விஜயன், சுப்புராஜ், பாவா லட்சுமணன், வினிதா, தீபா உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – குமரன்.ஜி, இசை – ஷாம்.சி.எஸ், படத்தொகுப்பு – சுரேஷ்.எம்.கோட்டீஸ்வரன்,  நடனம் – ராதிகா, சண்டைப் பயிற்சி – ‘பெஞ்ச்’ ரமேஷ், கதை, வசனம், பாடல்கள், தயாரிப்பு – இரா. சோதிவாணன், திரைக்கதை, இயக்கம் - கே.கிருஷ்ணமூர்த்தி.

மைசூர் சாமூண்டி காட்டுப் பகுதியில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, அங்கு வெடி குண்டு வீசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. அப்போது, மரக் கிளைகளில் இருந்த விஷ எறும்புகள் கதாநாயகியின் உடல் முழுவதும் கடித்துவிட்டது.

அதனால், அவர் வலியால் துடித்தார். உடனே அருகில் உள்ள கிராம வைத்தியரை வரவழைத்து மருத்துவம் பார்க்க வைத்தனர். அவர் ஒருவித பச்சிலை சாரை நாயகியின் உடல் முழுவதும் பூசியதுடன், உள்ளுக்குள் பச்சிலை மருந்து கொடுத்து ஓய்வெடுக்க வைத்தார். ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு, மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நாயகி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்கால், வைத்தீஸ்வரன்கோவில், கிருஷ்ணகிரி, மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions