எம்.ஜி.ஆர். சிவாஜியின் கலவையாக அமிதாப் பச்சன் இருக்கிறார்: கமலஹாசன்

Bookmark and Share

எம்.ஜி.ஆர். சிவாஜியின் கலவையாக அமிதாப் பச்சன் இருக்கிறார்: கமலஹாசன்

சுருதிஹாசன் வளர்ச்சியில் பெருமைப்படுகிறேன் என்று கமலஹாசன் கூறினார்.

கமலஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–

உத்தம வில்லன் படம் நினைத்த மாதிரி சிறப்பாக வந்துள்ளது. இதில் டைரக்டர் பாலசந்தர் நடித்து இருக்கிறார். அவரிடம் நான் வேலை பார்த்து இருக்கிறேன். அவர் படங்களில் உதவியாளராக பணியாற்றி இருக்கிறேன். கதை விவாதங்களில் இருந்து இருக்கிறேன், டான்ஸ் மாஸ்டராகவும் பணி செய்துள்ளேன்.

எனவே அவரோடு சேர்ந்து நடித்த போது வித்தியாசத்தை உணரவில்லை. ஆனாலும் உத்தமவில்லன் படத்தில் அவர் நடித்து இருப்பது முக்கியமானதாக கருதுகிறேன். நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டு இருந்த ஒரு விஷயம் முடிந்த மாதிரி இருக்கிறது. விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்.

விமர்சகர்கள் சிறந்த நடிகர்களை உருவாக்கும் சிற்பிகள். நல்ல விஷயங்களை பாராட்டுகிறார்கள். அது போல் தவறுகளை சுட்டி காட்டுகிறார்கள். படங்கள் வெற்றி பெறும் போது மகிழ்ச்சி அடைவது போல் விமர்சனங்களை பார்த்தும் சந்தோஷப்படுகிறேன். திரையுலகில் இன்றைய இளைஞர்கள் திறமை சாலிகளாக இருக்கிறார்கள். பலரின் பெயர்கள் கூட தெரியவில்லை. பெரிதாக சாதிக்கிறார்கள். பொறாமை கூட வருகிறது. இவர்கள் அமெரிக்காவில் இல்லை. என்னை பொருத்தவரை ஆஸ்கார் விருது பெரிய விஷயமாக தெரியவில்லை. அதற்காக பயணப்படுத்துவம் நோக்கமாக இல்லை.


நமது படங்களை உலக அளவில் கொண்டுபோக வேண்டும் என்பது தான் முக்கியம் நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர். சிவாஜியின் கலவையாக அமிதாப் பச்சன் இருக்கிறார். என்னை பொறுத்த வரை ரசிகர்கள் தான் முக்கியமானவர். பணம், புகழ் வரும் போகும். ஆனால் ரசிகர்களை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வது தான் சிறப்பானது.

என் மகள்கள் சுருதிஹாசன், அக்ஷராவை நினைத்து பெருமைப்படுகிறேன். அக்ஷராவை அவ்வை சண்முகி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தேன். ஆனால் அக்ஷராவுக்கு விருப்பம் இல்லை கெஞ்சினேன். மூன்று நாள் தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார். இப்போது அக்ஷராவை ஷமிதாப் படத்தில் டைரக்டர் பால்கி நடிக்க வைத்து விட்டார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

சுருதி வளர்ந்த பிறகும் லட்சியத்தை அடைய வில்லை என்கிறார். இப்படி பசியோடு இருப்பது தான் நல்லது. அது இன்னும் வளர்ச்சியை ஏற்படுத்தும். திரைப்பட விழாக்களில் நான் பங்கேற்பது இல்லை. அது அரசியல் ஆகி விட்டது.

இவ்வாறு கமலஹாசன் கூறினார்.

 

 

 


Post your comment

Related News
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions