மிர்ச்சி செந்தில் பீலிங்ஸ்!

Bookmark and Share

மிர்ச்சி செந்தில் பீலிங்ஸ்!

ரேடியோ ஜாக்கியாக இருந்து சின்னத்திரையில் நடிகரானவர் மிர்ச்சி செந்தில். அவர் நடித்த சரவணன் - மீனாட்சி தொடர் அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அதை வைத்து சினிமாவிலும் நுழைந்தவர்.

தவமாய் தவமிருந்து, எவனோ ஒருவன் படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர், செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், பப்பாளி, வெண்ணிலா வீடு, ரொம்ப நல்லவன்டா நீ ஆகிய படங்களில கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்த படங்களில் விஜயலட்சுமியுடன் இணைந்து அவர் நடித்த வெண்ணிலா வீடு படம் நடுத்தர குடும்பங்களில் இரவல் நகை வாங்கிக்கொண்டு திருமண வீடுகளுக்கு பெண்கள் செல்வதை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

இயல்பாக நல்லதொரு கருத்தை சொல்லியிருந்தனர். அதனால் இந்த படம் தனக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்தாராம் மிர்ச்சி செந்தில். ஆனால், படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.

இதுபற்றி அவர் கூறும்போது,

நான் நடித்ததில் அது எனக்கு ரொம்ப பிடித்த படம். நாட்டுக்கு தேவையான விசயமும்கூட. அதனால் அந்த படத்தை நிறையவே எதிர்பார்த்தேன். ஆனால். படத்துக்கு சரியானபடி ப்ரமோஷன் செய்யவில்லை.

அதனால்தான் வெண்ணிலா வீடு படம் ஓடவில்லை என்று பீல் பண்ணும் அவர், என்னதான் நல்ல படங்களாக இருந்தாலும் அதை சரியான படி மக்களிடம் கொண்டு சேர்க்கும்போதுதான் வெற்றிபெறும் என்பதை இந்த படம் மூலம்தான் நான் அறிந்து கொண்டேன் என்கிறார்.


Post your comment

Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா! பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா! தமிழ்படத்தின் அடுத்த அலப்பறை
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இப்படிபட்டவர்களா?- ஷாக் ஆன ரசிகர்கள்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions