மீண்டும் புதிய கதையுடன் இணையும் மிருதன் படக்குழுவினர்!

Bookmark and Share

மீண்டும் புதிய கதையுடன்  இணையும் மிருதன் படக்குழுவினர்!

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌந்தரராஜன் இயக்கிய ‘மிருதன்’ படம் சமீபத்தில் வெளிவந்து அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜோம்பி வகையில் உருவாகியிருந்த இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சி. அந்த புதிய முயற்சியை அழகாக கையாண்டு, அனைத்து ரசிகர்களையும் ரசிக்கும்படி இந்த படத்தை கொடுத்திருந்தனர். 

தற்போது, ‘மிருதன்’ படக்குழு மீண்டும் ஒரு புதிய படத்தில இணையவிருக்கிறார்கள். இந்த முறையும் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய கதைக்களத்துடன் இறங்கவிருக்கிறார்கள்.

‘மிருதன்’ படத்தில் நடித்த ஜெயம் ரவி இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். சக்தி சௌந்தரராஜன் இயக்கவிருக்கிறார். கதாநாயகி தேடுதல் படலம் நடக்கிறது. 

‘மிருதன்’ படக்குழு இணையும் இந்த புதிய படம் ஒரே நாளில் திடீரென முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படம் மிருதன் படம் போன்று இல்லாவிட்டாலும், தமிழ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக புது விதமான அனுபவத்தை கொடுக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

மேலும், இப்படம் குறித்த பல தகவல்கள் அதிகாரப்பூர்வமாக கூடிய விரைவில் வெளியாகும் என நம்பலாம். இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செல்வகுமார் தயாரிக்கவிருக்கிறார்.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions