10 வருடமாக மிதுன் சக்கரவர்த்தி நடத்தும் சர்வதேச பள்ளி மூடப்படுகிறது

Bookmark and Share

10 வருடமாக மிதுன் சக்கரவர்த்தி நடத்தும் சர்வதேச பள்ளி மூடப்படுகிறது

இந்தி பட உலகில் 1980 மற்றும் 90–களில் மிதுன் சக்கரவர்த்தி முன்னணி கதாநாயகனாக இருந்தார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். டெல்லி மேல்சபை எம்.பி.யாகவும் இருக்கிறார்.

கோவையை அடுத்த துடியலூர் குருடம்பாளையத்தில் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான மோனார்க் சர்வதேச பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிறைய மாணவர்கள் படிக்கிறார்கள். கடந்த 10 வருடங்களாக இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது.

கல்வி துறையிடம் உரிய அனுமதி பெறாமல் இந்த பள்ளி நடத்தப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சர்வதேச பள்ளி கல்வித் துறையில் உரிய அனுமதி பெறாமல் செயல்படுவது தெரியவந்தது.

‘உரிய அனுமதி பெறாமல் செயல்படும் உங்கள் பள்ளியை ஏன் மூட நடவடிக்கை எடுக்கக்கூடாது’? என்று விளக்கம் கேட்டு கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு பள்ளி நிர்வாகம் ‘வருகிற ஏப்ரல் மாதத்துடன் பள்ளியை மூடி விடுகிறோம்’ என்று பதில் அளித்துள்ளதாக தெரிகிறது.
இந்த தகவலை கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உறுதி செய்துள்ளார். 


Post your comment

Related News
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
வினுசக்கரவர்த்தி உடலுக்கு நடிகர் - நடிகைகள் அஞ்சலி: இன்று மாலை தகனம்
போலீஸ் அதிகாரியாக வாழ்க்கையைத் துவங்கி சினிமாவில் முத்திரை பதித்த வினுசக்கரவர்த்தி
கம்பீர குரலுக்கு சொந்தமான வினு சக்கரவர்த்தி திடீர் மரணம் - திரையுலகம் அதிர்ச்சி
நடிகர் வினுசக்கரவர்த்தியை மருத்துவமனையில் சந்தித்த விஜயகாந்த்
ரத்த அழுத்தம் - சர்க்கரை நோய் காரணமாக நடிகர் வினுசக்கரவர்த்தி ஆஸ்பத்திரியில் அனுமதி
தமிழில் எப்படி மிதுன் சக்கரவர்த்தி நடிக்க சம்மதித்தார்!
பின் மண்டையில் அடி வாங்க பயந்தேன் ‘பட்ற’ கதாநாயகன் மிதுன்
35 லட்சத்தில் செட் ஒருநாள் கூட ஷுட்டிங் இல்லை... சிம்பு - தயாரிப்பாளர் மோதல்.
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions