மீண்டும் வருகிறார் மோகன்

Bookmark and Share

மீண்டும் வருகிறார் மோகன்

1982 ல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 1991வரை தனி ராஜ்யத்தையே நடத்தியவர் மோகன். இவர் கையில் மைக் பிடித்து பாடி நடித்தால் அந்தப் படம் வெள்ளிவிழா என்கிற செண்டிமெண்ட் கொடிகட்டி பறந்தது.

நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள், தென்றலே என்னை தொடு, மவுன ராகம், உதய கீதம், இளமைக் காலங்கள், பிள்ளை நிலா, என தொடர்ந்து வெள்ளி விழா படங்ளை கொடுத்த வெள்ளிவிழா நாயகன்.

ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறையவே சினிமாவில் இருந்து விலகி இருந்தார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்ததால் வேறு படங்களில் வந்த வாய்ப்பையும் தவிர்த்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் சுட்டபழம் என்ற படத்தில் நடித்தார். அது வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

ஜெயம்ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்திற்கு வில்லனாக நடிக்க கேட்டார்கள். மறுத்து விட்டார்.தனது ரீ-என்ட்ரி பலமாக இருக்க வேண்டும் என்று கருதிய மோகன் அதற்காக காத்திருந்தார்.

தற்போது அவர் கன்னடத்தில் தயராகும் அசோகவனா என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இது ஒரு த்ரில்லர் படம். மைக் பிடித்து நடித்த மோகன் இதில் துப்பாக்கி பிடித்து நடிக்கிறார்.

இந்தப் படம் தமிழில அசோகவனம் என்ற பெயரில் வெளியாகிறது. ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது. மோகனுக்கு ஜோடியாக தேஜஸ்வினி நடிக்கிறார்.

ஷாம் ஜே.சைதன்யா இயக்குகிறார். நீண்ட காலத்துக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட படம் இப்போது முடிந்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இரண்டு மொழிகளிலும் வெளிவருகிறது.

 


Post your comment





Related News
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்?
மாரடைப்பால் உயிரிழந்தார் கிரேசி மோகன்.!
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions