மோகன் பாபு அடுத்த ரவுண்டுக்கு ரெடி...!

Bookmark and Share

மோகன் பாபு அடுத்த ரவுண்டுக்கு ரெடி...!

டோலிவுட்டின் மூத்த பிரபல ஹீரோவான மோகன் பாபு, பிரபல இயக்குனர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. மோகன் பாபு சமீபத்தில் தான் தனது மகன் மஞ்சு மனோஜின் திருமணத்தை மிகப்பிரமாண்டமான நடத்தினார்.

அந்த திருமணம் முடிந்த உடன் அவர் புதிய படத்தை தொடங்குவார் என்று அப்போதே கூறப்பட்டது. மேலும் அவர் ஒரு மராத்தி மொழி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.

அந்த படத்தின் கதையில் தான் நடிக்கப்போகிறாரா என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அந்த புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னாள் நாயகிகளான ரம்யா கிருஷ்ணன், நக்மா, பூமிகா மற்றும் சிம்ரன் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

இதன் முறையான அறிவிப்பு விரைவில் வெளிவருகின்றது. இதன் மூலம் முன்னாள் நடிகைகளின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இயக்குனர் ஸ்ரீநிவாஸ் ரெட்டியும், பிரபல ஹீரோ நாக சைதன்யாவும் ஒரு புது படத்திற்காக இணைகிறார்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் என்ன காரணத்திற்காகவோ அது நடக்காமல் போனது.


Post your comment





Related News
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions