முகேஷ் நடத்தும் நாடகத்துக்கு வாய்ஸ் கொடுக்கிறார் மோகன்லால்..!

Bookmark and Share

முகேஷ் நடத்தும் நாடகத்துக்கு வாய்ஸ் கொடுக்கிறார் மோகன்லால்..!

மலையாள நடிகர் முகேஷை, நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் என்று சொல்வதைவிட,  ஐந்தாம்படை படத்தில் சிம்ரனுக்கு ஜோடியாக நடித்தவர் என்று சொன்னால் இன்றைய ரசிகர்களுக்கு சட்டென புரிபடும்.

நேரடியாகவே விஷயத்துக்கு வருவதென்றால் முகேஷ் மேடை நாடகம் ஒன்றை அரங்கேற்ற போகிறார். இந்தி குணச்சித்திர நடிகரும் நாடக ஜாம்பவானுமான கிரிஷ் கர்னாட்டின் பிரபல நாடகங்களில் ஒன்றான நாக மண்டலா வைத்தான் மேடையேற்ற போகிறார் முகேஷ். இந்த நாடகத்தில் கதாநாயகி பாத்திரத்தில் முகேஷின் மனைவியான மெத்தில் தேவிகா ஏற்கிறார்.

கிட்டத்தட்ட 30 வருடங்களாக மேடைகளில் நடனம் ஆடி வருபவர் தான் என்றாலும், மெத்தில் தேவிகாவுக்கு மேடை நாடகமும், நடிப்பும் புதுசுதானாம். இரண்டு மணி நேரம் நடைபெற இருக்கும் இந்த நாடகத்தின் கதை சொல்லியாக, பின்னணி குரல் கொடுப்பவராக மோகன்லால் தான் பொறுப்பேற்க வேண்டும் என முகேஷ் அன்புக்கட்டளை போட, மோகன்லாலும் ஒப்புக்கொண்டு விட்டாராம்.

இருவரும் கடந்த முப்பது வருடங்களாக பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த 'பெருச்சாழி' கடந்த வருடம் வெளியானது.


Post your comment





Related News
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions