சிகிச்சைக்காக ஜப்பான் செல்கிறார் மோகன்லால்..!

Bookmark and Share

சிகிச்சைக்காக ஜப்பான் செல்கிறார் மோகன்லால்..!

சூப்பர்ஸ்டார் என்றாலும் மோகன்லாலும் மனிதர் தானே.. வருடத்திற்கு ஐந்து படங்களுக்கு குறையாமல் நடித்து வருகிறார்.. சில படங்களில் அலட்டிக்கொள்ளாமல் நடித்தாலும், இன்னும் சில படங்களில் கொஞ்சம் கூட தயங்காமல் ரிஸ்க் எடுத்து நடிக்கிறார்.

இந்த வருடத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் தனது இரண்டு படங்களை ரிலீஸ் பண்ணிவிட்டார்.. ஜோஷியின் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ள ஆக்சன் படமான 'லைலா ஓ லைலா' இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் ரஞ்சித் டைரக்சனில் நடித்து வரும் 'லோஹம்' படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்து விட்டார் மோகன்லால்.. இந்தப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையே நீண்ட நாட்களாக அவ்வப்போது அவருக்கு தொந்தரவு கொடுத்து வரும் முதுகு வலி சிகிச்சைக்காக இந்த மாதமே ஜப்பான் செல்ல இருக்கிறார் மோகன்லால்.

கூடவே டூர் போனது மாதிரியும் இருக்கும் என்பதால் குடும்பத்தையும் அழைத்து செல்கிறார். மீண்டும் கேரளா திரும்பியபின் ஜூன் மாதம் பத்மகுமார் இயக்கத்தில் தொடங்கவுள்ள 'கனல்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தெரிகிறது.


Post your comment





Related News
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions