சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திடீரென மிஸ்டர்.லோக்கல் மே 17 அன்று வெளியாகும் என்று இப்படத்தை தயாரித்திருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்திருக்கிறது. 

இதுகுறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த போது, லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திற்கு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்கிறபோது குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் வரை படத்தை ஓட்ட வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட பின்னரே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

இதனால் தமிழகத்தில் காஞ்சனா 3 படம் வெளியிடப்பட்டிருக்கும் சுமார் 450 திரையரங்குகளில் புதிய படங்களை திரையிட முடியாது.

அதோடு ஏப்ரல் 26 அன்று மார்வெலின் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் என்ற ஆங்கிலப் படமும் வெளியாக இருக்கிறது. அதிக எதிர்பார்ப்பில் உள்ளதால் அவை 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை ஆக்கிரமித்துக்கொள்ளும். தமிழகத்தில் மொத்தம் இருப்பது 1100 திரையரங்குகள்.

இவற்றால் மிஸ்டர்.லோக்கல் படத்துக்கு முக்கிய நகரங்களில் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த தேதி மாற்றம்” என்று கூறுகின்றனர். 


Post your comment





Related News
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?
மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா
நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions