ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?

Bookmark and Share

ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?

மிஸ்டர் லோக்கல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் மான்ஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் உறவினர்கள்.எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அதேநாளில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள மான்ஸ்டர் படமும் வெளியாகவுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் மிஸ்டர் லோக்கல் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் மான்ஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் உறவினர்கள். இப்படி உறவினர்கள் ஒரேநாளில் மோதுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions