எம்.எஸ்.வி., கடந்து வந்த பாதை!

Bookmark and Share

எம்.எஸ்.வி., கடந்து வந்த பாதை!

கேரளாவில் பிறந்தவர் 1928ம் ஆண்டு, ஜூன் 24ம் தேதி கேரள மாநிலம், பாலக்காட்டில் பிறந்தவர் எம்.எஸ்.வி., இவரது முழுப்பெயர் மனையங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். இதை தான் இவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று சுருக்கி கொண்டார்.

13வயதில் மேடை சங்கீதம் சிறு வயதிலேயே தந்தையை இழந்து மிகவும் கஷ்டப்பட்ட எம்.எஸ்.வி., நீலகண்ட பாகவதரிடம் முறைப்படி சங்கீதம் கற்றார். தனது 13வது வயதில் மேடையில் முதல் கச்சேரி செய்தார்.

எம்.எஸ்.விக்கு சினிமாவில் ஒரு பாடகராகவும், நடிகராகவும் தான் வர ஆசை. அதன்காரணமாக ஆரம்பகாலத்தில் நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கவும் செய்தார்.

டி.கே.ராமமூர்த்தியின் நட்பு இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா மூலம், எஸ்.வி.வெங்கட்ராமனிடம் அறிமுகப்படுத்தப்பட்டு பணி அமர்த்தப்பட்டார். அதன்பின்னர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினார்.

இந்த காலக்கட்டத்தில் வயலின் இசை கலைஞரான டி.கே.ராமமூர்த்தியின் நட்பு கிடைத்தது. எதிர்பாராதவிதமாக 1952-ல் 'சி.ஆர்.சுப்பாராமன் இறக்க நேரிட, அவர் பணியாற்றி வந்த தேவதாஸ், சண்டிராணி, மருமகள் போன்ற படங்களுக்கு பின்னணி இசையமைப்பாளர்களாக இந்த இரட்டையர்கள் தொடர்ந்தனர்.

தொடங்கி வைத்த பணம் இவர்களின் திறமையை அறிந்த என்.எஸ்.கிருஷ்ணன், தனது சொந்த படமான பணம் படத்திற்கு இவர்களை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெயர் வந்தது எப்படி.? பணம் படத்திற்கு விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட பின், இசையமைப்பாளர் பெயரில் ராமமூர்த்தி - விஸ்வநாதன் பெயர் வர வேண்டும் என விஸ்வநாதன் விரும்பினார். காரணம், ராமமூர்த்தி வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் என்பதால் இதை விரும்பினார்.

ஆனால் என்.எஸ்.கிருஷ்ணனோ, வயதிலும், அனுபவத்திலும் மூத்தவரான ராமமூர்த்தி உன் பின்னால் இருப்பது உன்னை தாங்கி பிடிப்பது போன்ற ஒரு வலிமையை கொடுக்கும் என்ற காரணத்தினால் விஸ்வநாதன் பெயரை முன்பும், ராமமூர்த்தியின் பெயரை பின்னாலும் இணைத்தார் என்.எஸ்.கே. சென்ஞ்சுரி அடித்த இரட்டையர்கள் 1952ம் ஆண்டு பணம் படத்தில் துவங்கிய இந்த இரட்டையர்களின் வெற்றி கூட்டணி 1965ம் ஆண்டு வரை தொடர்ந்தது.

இருவரும் சேர்ந்து இந்த 13 ஆண்டுகளில், 100 படங்களுக்கு மேல் இசையமைத்தனர். இவர்கள் கடைசியாக இசையமைத்து மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம், எம்.ஜி.ஆர். உடன் ஜெயலலிதா இணைந்த முதல்திரைப்படமான, இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் பிரமாண்ட தயாரிப்பான ''ஆயிரத்தில் ஒருவன்''. இதன் பின்னர் இருவரும் தனித்தனியாக இசையமைக்க தொடங்கினர்.

ஆண்டுகள் எம்.எஸ்.வி.யின் இசை ராஜ்யம் விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் இணைந்து 700 படங்களுக்கும், இவர் தனியாக, 500 படங்கள் என, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என, 1,200 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். 1951 முதல் 1981 வரை, 30 ஆண்டுகள், தமிழகத்தில், அவரது இசை ராஜ்யம் தான் நடந்தது.


Post your comment

Related News
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சென்னையில் சிலை: இளையராஜா தகவல்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக தயாராகப்போகும் படம்
எம்.எஸ். விஸ்வநாதன் உடலை பார்த்து கண்கலங்கிய இளையராஜா, வடிவேலு
எம்.எஸ்.வி.மறைவு : மோடி இரங்கல்
எம்.எஸ்.வி.யின் சங்கீதம் அழியாது - கே.ஜே.யேசுதாஸ்
எம்.எஸ்.வி.க்கு இசையே மூச்சு : எஸ்.பி.முத்துராமன்
இசை உள்ள வரை எம்எஸ்வி இருப்பார் - குஷ்பூ
எம்.எஸ்.வி. மறைவு : சினிமா பணிகள் நாளை ரத்து
ஹார்மோனியம் அடங்கிவிட்டது : வைரமுத்து
எம்.எஸ்.வி. மறைவு : பிரபலங்கள் அஞ்சலி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions