பிரான்சில் கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு மரியாதை வணக்கம்!

Bookmark and Share

 பிரான்சில் கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு மரியாதை வணக்கம்!

தமிழ்உலகை ஆறாப்பெருந்துயரில் ஆழ்த்திய கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவுக்கு பிரான்சில் மரியாதை வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றிருந்த இந்த வணக்க நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கெடுத்து தங்களது மரியாதை வணக்கத்தினை செலுத்தினர்.

வணக்க உரைகள், பாடல்கள், கவிதை, விவரணக்காட்சி என நா.முத்துக்குமாரன் அவர்களது நினைவுகளைத் தாங்கியதாக நிகழ்வு அமைந்திருந்தது.

நா.முத்துக்குமார் படைத்த பாடல்களுக்கும் கவிதைகளுக்கும் படைப்புகளுக்கும் பின்னால் இருந்த அறமும் மனித நேயமும் அன்புமே அவனை தமிழ்உலகம் கொண்டாட வைத்தது.

அதானல்தான் அவனின் மறைவுக்காக கண்ணீர் வடிக்கிறது, இதுவே ஈழத்தமிழர் திரைப்பட சங்கமும் அப்பெரும் கவிஞனுக்கு மரியாதை வணக்கம் செலுத்துகிறது என சுதன்ராஜ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

மிக எளிமையான மனிதனாக எளிமையான வரிகள் ஊடாக தனது கவிதை ஆளுமையினை பாடல்களில் நா.முத்துக்குமார் படைத்திருந்தார் என வணக்க உரையினை வழங்கியிருந்த கவிஞர் மாணி. நாகேஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

நாயகர்களை மையப்படுத்தி நட்சத்திர பிம்பங்களுக்குள் மத்தியில் பாடல் எழுதியவர்களின் பெயர்கள் கொண்டாடாத ஓரு சமூகத்தில் ஓர் கவிஞனை முன்னிலைப்படுத்தி நடக்கின்ற இவ்வணக்க நிகழ்வு முக்கியமானது என சமூகச் செயற்பாட்டாளர் முகுந்தன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

மிகுந்த ஆளுமை மிக்க ஒரு கவிஞனாக சமூகத்தை நேசித்த நா.முத்துக்குமார் தனது உடல் நலத்தில் நேசம் கொள்ளாது இடைநடுவில் விட்டுச் சென்றது குறித்தான தனது வருத்த்தினை கருத்தாளர் அசோக் அவர்கள் முன்வைத்திருந்தார்.

இந் நிகழ்வில் தமிழக ஊடகப்பரப்பில் நா.முத்துக்குமார் தொடர்பில் வெளிவந்திருந்த காட்சித்தொகுப்புகள் திரையிடப்பட்டிருந்தது.

நா.முத்துக்குமார் அவர்களுக்கு இந்திய தேசிய விருதுகளை பெற்றுத் தந்த இரு பாடல்களையும் ஜெய்க்கிசன் மற்றும் சோனா ஆகியோர் பாடி அரங்கிணை கவிஞனின் நினைவில் மூழ்கச்செய்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

 

 


Post your comment

Related News
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
பிரபல நடிகையிடம் படப்பிடிப்பில் சில்மிஷம் செய்து சிக்கிய பிரபல நடிகர்! உண்மை அம்பலம்
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ராஷ்மிகா
சிம்புவுடன் நடிக்கும் பிரபல ஹீரோ
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions