நாய்கள் ஜாக்கிரதை இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி

Bookmark and Share

நாய்கள் ஜாக்கிரதை இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி

கடந்த வருடம் சிபிராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’. இப்படத்தில் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது.

இப்படத்தை சக்தி ராஜன் இயக்கியிருந்தார். ராணுவத்தில் பயிற்சி பெற்ற நாய், போலீசாக இருக்கும் சிபிராஜுடன் இணைந்து சிபிராஜியின் மனைவியை கடத்திய கடத்தல் கும்பலை தேடி கண்டுபிடிப்பதை திரைக்கதையாக அமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் சக்தி ராஜன். இவருடைய அடுத்தப் படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தை மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்போடைன்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ஜெயம் ரவி தற்போது ‘அப்பாடக்கர்’, ‘தனி ஒருவன்’, ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் சக்தி ராஜன் இயக்கும் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் பற்றிய முழு விவரமும் விரைவில் வெளியிடவுள்ளனர்.


Post your comment





Related News
மீண்டும் ஜோடியாக நடிக்கும் ஜெய் - அதுல்யா ரவி
தேவர் மகன் படத்துக்கும் ஜெயம் ரவி படத்துக்கும் இப்படியொரு தொடர்பா?
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions