நந்திதாவின் பெங்களூர் விசிட்!

Bookmark and Share

நந்திதாவின் பெங்களூர் விசிட்!

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்த நந்திதா, இப்போது இடம் பொருள் ஏவல் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். முந்தைய படத்தைப்போலவே இந்த படத்திலும் நந்திதாவுக்கு நல்ல ரோல்தானாம். அதனால் இந்த படம் ஹிட்டடித்தால் விஜயசேதுபதியின் ராசியான ஹீரோயின் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன் என்கிறார் நந்திதா. 

மேலும், தனக்கு சிட்டி சப்ஜெக்ட்டுகளை விட வில்லேஜ் சப்ஜெக்ட்டுகளே தொடர்ந்து ஒர்க்அவுட்டாகி வருவதால், கிராமத்து கதைகளுக்கே தற்போது முக்கியத்துவமும் கொடுத்து வருகிறேன் என்று கூறும் நந்திதா, இதேபோல் தனது தாய்மொழியான கன்னடத்திலும் வில்லேஜ் கதைகளாக தேடுகிறாராம். 

அதனால், ஏற்கனவே நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தில் நடித்துள்ள அவர், சென்னையிலேயே முகாமிட்டு தமிழ்ப்படங்களில் நடித்தபோதும், அடிக்கடி கன்னட பட விசயமாக பெங்களூர் சென்று வருகிறார். ஆனால், தமிழப்பட இயக்குனர்களுக்கு இவர் கன்னட படங்களில் நடிக்க முயற்சி எடுக்கிறார் என்று தெரிந்தால் ஓரங்கட்ட நினைப்பார்கள் என்பதால், எப்போது பெங்களூர் சென்றாலும், என் தோழிகளுடன் அரட்டை அடிக்காமல் ரொம்ப போரடிக்கிறது. அதனால்தான் பெங்களூர் விசிட் அடிக்கிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார் நந்திதா.


Post your comment





Related News
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
விஜய் ஆசை நிறைவேறாமல் போனதா?
மிரட்டும் தாரை தப்பட்டை ட்ரைலர்!
பாலாவின் தாரை தப்பட்டைக்கு ’எ’ சான்றிதழ்!
பொங்கலுக்கு படையெடுக்கும் 5 படங்கள்?
தாரைதப்பட்டை கிழித்துத் தொங்க விட்ட இளையராஜா!
பலத்த வரவேற்பைப் பெற்றது இளையராஜாவின் தாரை தப்பட்டை இசை!
தாரை தப்பட்டை இசை வெளியானது : ரசிகர்கள் உற்சாகம்!
கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் நான்கு படங்கள் ஆடியோ!
இசை வெளியீட்டை எளிமையாக நடத்தும் தாரை தப்பட்டை படக்குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions