நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம்!

Bookmark and Share

நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம்!

நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் ! வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குகிறது.

பிரபல கல்வி நிறுவனமான “வேல்ஸ் பல்கலைக்கழகம்” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும் பிரபல நடிகருமான திரு.நாசர் அவர்களுக்கு அவரது கலைச் சேவையைப் பாராட்டி “டாக்டர் பட்டம்” வருகிற 7ம் தேதி காலை 9 மணியளவில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வழங்கி கௌரவிக்க உள்ளது.

தனது 6 வயதில் நாடகங்களில் நடித்து தன் கலையுலக வாழ்கையை துவங்கிய நாசரை 1985 ஆம் ஆண்டு இயக்குனர் K.பாலசந்தர் அவர்கள் “கல்யாண அகதிகள்” என்ற திரைபடத்தில் நடிகராக அறிமுகபடுத்தினார்.

தொடர்ந்து கடந்த 30 வருடங்களில் தமிழ்,ஆங்கிலம்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தன் கலையுலக பயணத்தை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இவ்விழா வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 6வது பட்டமளிப்பு விழாவாகும். இவ்விழாவிற்கு வேல்ஸ் பல்கலைகழக நிறுவன வேந்தர் டாக்டர். ஐசரி k.கணேஷ் தலைமையேற்று அவருடன் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஜெஸ்டி செலமேஸ்வர் சிறப்பு விருந்தினராக உரையாற்ற, முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர் .P.S.சவ்ஹான் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்க உள்ளார்.

 


Post your comment

Related News
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
சின்னத்திரைக்கும் பெரியதிரைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை - நடிகர் சங்க தலைவர் நாசர்
நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்
படப்பிடிப்பில் கேரவன் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?: நாசர் கேள்வி
22 துணை நடிகர்-நடிகைகளுக்கு நோட்டீசு: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு
நடிகர் சங்கம் திருட்டு DVD வேட்டை ஒரு லட்சம் புதுப்பட குருந்தகுடுகள் பறிமுதல்!
நடிகர் சங்கத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைக்கா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions