நாசரின் மகன் அறிமுகமாகும் சுன்சுன் தாத்தா!

Bookmark and Share

நாசரின் மகன் அறிமுகமாகும் சுன்சுன் தாத்தா!

வரச கலைஞர் நாசருக்கு மூன்று மகன்கள். அவரது மூன்றாவது மகன் தற்போது எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறாராம்.அவரை  ஹீரோவாக அறிமுகப்படுத்தும் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார் நாசர். அதுவும் மலேசியத் தமிழ்திரைப்படமாக அதை இயக்கியிருக்கிறார். படத்துக்கு ‘சுன்சுன் தாத்தா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

 
முழுக்க மலேசியாவிலேயே படமாக்கப் பட்டிருக்கும் இந்தப்படத்தின் கதையும் மலேசியாவின் சமகால வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. மலேசியாவில் கணவன்,மனைவி ஆகிய இருவரும் வேலைக்குப் போய் விடுகிற வீடுகளில் உள்ள தமிழ் பிள்ளை பெரும்பாலும் தனிமையிலேயே இருக்கிறார்கள். பெற்றோரின் அன்புக்கும் அரவணைப்புக்கும் அவர்கள் ஏங்கிக் கொண்டிருக்க இவர்களோ பணத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் கதைக் களம்.

ஒரு கலைப் படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் 13 வயது சிறுவனாக நாசரின் மகன் நடித்திருக்கிறார். அவனது அப்பாவாக நாசரே நடித்திருக்கிறார். படத்தில் முக்கியமான ஒரு தாத்தா வேடத்துக்கும் அம்மா வேடத்துக்கும் மலேசியாவைச் சேர்ந்தவர்களையே நடிக்க வைத்திருக்கிறாராம். இந்தப்படத்தை விரைவில் மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு ஆகிய மூன்று இடங்களிம் ஒரே நேரத்தில் வெளியிட இருகிறார்கள்.  மலாய் மொழியிலும் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் கமீலாநாசர்.
 


Post your comment





Related News
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
கீழே எதுவும் போடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த எமி - வைரலாகும் புகைப்படம்!
விஜய்யை பார்க்க வந்த பிரம்மாண்ட கூட்டம் – இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன நடிகை!
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
புற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions