கல்யாணம் இருக்கட்டும்..நயன்தாராவுக்கு இதெல்லாம் நடப்பது எப்போது?

Bookmark and Share

கல்யாணம் இருக்கட்டும்..நயன்தாராவுக்கு இதெல்லாம் நடப்பது எப்போது?

நயன்தாராவுக்கு திருமணம் நடப்பது எப்போது என அனைவரும் சீட்டு குலுக்கிப்போட்டு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவிற்குள் நயன்தாரா நுழைந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அவருக்கு நடக்கவேண்டிய சில விஷயங்கள் நடக்காமலே இருக்கின்றனவே.. அதெல்லாம் எப்போது நடக்கும்..? நடக்குமா..? நடப்பதற்கான சாத்தியங்கள் உண்டா என்பது பற்றி நயன்தாரா ரசிகர்களே யோசித்ததாக தெரியவில்லை. 

இன்றைக்கு சினிமாவில் அறிமுகமாகும் இளம் கதாநாயகி கூட தனது லட்சியம் ரஜினி, கமல் படத்தில் அவர்களுடன் ஒரு காட்சியிலாவது தலைகாட்டிவிடவேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் தமிழில் தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியுடன் நடித்துவிட்ட நயன்தாராவுக்கு இன்னும் கமலுடன் சேர்ந்து நடிக்க முடியாமல் தடையாக இருப்பது எது..? 

விக்ரமுடன் உலகி அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துவிட்டார். லண்டன் அழகி எமி ஜாக்சன் இரண்டு படத்தில் நடித்துவிட்டார். அதேபோல நயன்தாராவும் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா வரைக்கும், அவ்வளவு ஏன் அறிமுக நடிகராக களம் இறங்கிய உதயநிதியுடன் கூட இரண்டு படங்களில் நடித்து விட்டார்.

ஆனால் பத்து வருடங்கள் தாண்டியும் விக்ரமுடன் நயன்தரா ஜோடிசேர்வதற்கான வாய்ப்புகளே கண்ணுக்கெட்டிய தூரம் தெரியவில்லை. இப்போது ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக வரும் செய்திகள் கூட யூகம் தான். ஆனால் வாய்ப்பு இனி இல்லையென்றே விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.  

காரணம் சில வருடங்களுக்கு முன் எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானபோது, அதை ஒதுக்கி தள்ளிவிட்டு தனது கந்தசாமி படத்தில் நடிக்கவருமாறு அழைப்பு விடுத்தாராம் விக்ரம்.. ஆனால் நயன்தாராவுக்கு சின்ன நடிகர், பெரிய நடிகர் என்கிற பாகுபாடு பிடிக்காததால், அப்போதிருந்தே விகரமுடன் நடிக்கும் ஐடியாவை ஒழித்துக்கட்டிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. 

அதேபோல இயக்குனர் மணிரத்னம் படமும் ஒவ்வொரு நடிகையின் கனவு தான். ஆனால் அவர் கதைகளுக்காக நாயகியை மட்டுமே தேடுபவர் என்பதால் நயன்தாரா அவரது மனக்கண்ணில் நயன்தாரா தோன்றவில்லையோ என்னவோ..? அதுமட்டுமல்ல நயன்தாரா அறிமுகமான பின் அவர் இயக்கியது மூன்று தமிழ்ப்படங்களைத்தான்.

அதில் ராவணன் தமிழ், இந்தி என இருமொழிப்படம் என்பதால் ஐஸ்வர்யா ராயைத்தவிர யாரும் அவரது சாய்ஸ் லிஸ்ட்டில் இல்லை. அடுத்து, கடல், ஓ காதல் கண்மணி ஆகிய இரண்டு படங்களும் இளசுகளுக்கான கதை என்பதால் அதில் நயன்தாராவுக்கு வேலையே இல்லையே. 

ஆனால் இயக்குனர் கௌதம் மேனன் தனது படங்களில் நட்சத்திர அந்தஸ்து உள்ள கதாநாயகி இருந்தால் ஒகே என்று நினைப்பவர் தான். இன்றைய கதாநாயகிகளும் கௌதம் மேனன் படத்தில் ஒருமுறையாவது நடித்து விடவேண்டும் என நினைப்பார்கள்..

காரணம் கதாநாயகிக்கு அவர் தரும் முக்கியத்துவமும் அவர்களை ஸ்டைலிஷாக அவர் காட்டும் பாணியும் தான்.  ஆனால் அவர் கூட ஜோதிகா, த்ரிஷாவை வைத்து இரண்டு படங்கள் இயக்கிவிட்டாரே தவிர நயன்தாரா பக்கம் முகத்தை திருப்புவதாக தெரியவில்லை. 

ஷங்கர் டைரக்சனில் சிவாஜி யில் ஒரு பாடலுக்கு ஆடிவிட்டு சென்றாலும் கூட அவரது படத்தில் நடித்த முழு பாக்கியத்தை நயன்தாரா பெற்றுவிட்டார். அதனால் அந்தக்குறை இவருக்கு இருக்காது.

ஆக நயன்தாரா திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆவதற்குள் மேற்கூறிய இந்த நான்கு காம்பினேஷனில் ஏதாவது ஒன்று ஒர்க் அவுட் ஆனால் கூட நயன்தாராவின் திரையுலக பயணம் கிட்டத்தட்ட முழுமை பெற்ற மாதிரிதான்.


Post your comment

Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களை உற்சாகப்படுத்திய நயன்தாரா
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா! என்ன சொல்றீங்க
இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions