
அஸ்வின் சரவணன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி, நயன்தாரா நாயகியாக நடித்துள்ள படம் மாயா.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பேய்ப் படங்கள் வெளிவந்த காரணத்தால் ஒரு சிறு இடைவெளிவிட்டு படத்தை வெளியிடலாம் என தயாரிப்பு நிறுவனமும், படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அடுத்தடுத்து பல புதுப் படங்களை வெளியிட்ட காரணத்தால் மாயா படத்தின் வெளியீட்டை தள்ளிபோட்டனர்.
இந்தப் படத்தில் நெடுஞ்சாலை ஆரி கதாநாயகனாக நடித்துள்ளார் என்றும் நயன்தாராதான் ஜோடி ஆரி தான் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.
எனினும் நயன்தாராவுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம் என்கிறார்கள். இதற்கு முன் சூர்யா, நயன்தாரா நடித்து வெளிவந்த மாஸ் படம் மாபெரும் தோல்விப் படமாக அமைந்தபோதிலும் இப்படத்திற்கு ரசிகர்மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
நயன்தாரா ஜெயம் ரவியுடன் நடித்துள்ள தனி ஒருவன் 28ம் தேதியும், அதை தொடர்ந்து நானும் ரௌடிதான், திருநாள், காஷ்மோரா ஆகிய படங்களும் வெளிவர உள்ளன.
Post your comment
Related News | |
![]() |