ராதையாக நடிக்கும் நயன்தாரா..!

Bookmark and Share

ராதையாக நடிக்கும் நயன்தாரா..!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவுடன் 'ஸ்ரீராம ராஜ்யம்' படத்தில் நயன்தாரா சீதையாக நடித்தார்.

அடுத்து தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில் நயன்தாரா ராதையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

நயன்தாரா ஏற்கனவே வெங்கடேஷுடன் 'லட்சுமி', 'துளசி' ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இப்போது அவருடன் 3–வது படத்தில் இணைகிறார். இந்த படத்தை மாருதி இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். வெங்கடேஷ் கடந்த ஜனவரி மாதம் 'கோபால கோபாலா' படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது நயன்தாராவுடன் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயார் ஆகிறது. இது பக்திப் படம் அல்ல. மலையாளத்தில் வெற்றி பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

'ஸ்ரீராம ராஜ்யம்' படத்தில் சீதையாக நடித்த நயன்தாராவுக்கு ஆந்திர அரசின் 'நந்தி விருது' கிடைத்தது. ராதையாக நடிக்கும் நயன்தாரா மீண்டும் விருது பெறுவாரா என்பது இந்த படம் வெளியான பிறகுதான் தெரியும்.


Post your comment





Related News
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டு வரும் நயன்தாரா – ரசிகர்களுக்கு செம அப்டேட்!
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
என்னை விட நயன்தாராவுக்கு சம்பளம் ஜாஸ்தி – ஓப்பனாக சொல்லி வருத்தப்பட்ட பிரபல நடிகர்!
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
த்ரிஷாவின் மகளான நயன்தாராவின் மகள் – வைரலாகும் வீடியோ!
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?
மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா – என்னன்னு நீங்களே பாருங்க!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions