நல்ல பெயரை சம்பாதித்த நயன்தாரா!

Bookmark and Share

நல்ல பெயரை சம்பாதித்த நயன்தாரா!

தற்போதைய நிலவரப்படி அதிக படங்களில் நடிக்கும் நடிகை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நயன்தாரா. அதேசமயம் அப்படி தான் நடிக்கும் எல்லா படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்பதால் கால்சீட் விசயத்தில் ரொம்பவே கவனமாக இருக்கிறார் அவர்.

மேலும், சில படங்களுக்கு கால்சீட் திருத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், மற்ற படங்களுக்கு கொடுத்த கால்சீட் தேதியிலும் மாற்றம் ஏற்படும் என்பதால், இரண்டு தரப்பிலும் தானே முன்நின்று பேசி பிரச்னை ஏற்படாத வகையில் கால்சீட்களை கொடுக்கிறார்.

இதனால் நயன்தாராவைப் பொறுத்தவரை சம்பள விசயத்தில் தூக்கலாக இருக்கிறார் என்றாலும், கால்சீட்டில் குளறுபடி செய்யாத நல்ல நடிகை என்றொரு பெயர் தயாரிப்பாளர்கள் மத்தியில் உள்ளது.

மேலும், காட்சிகளில் நடிப்பதிலும் அதிக டேக்குகளை வாங்காமல் ஓரிரு டேக்குகளை ஓகே செய்து கொடுத்து விடுகிறாராம். இதனால், இயக்குனர்கள் மத்தியில் பர்பாமென்ஸ் நடிகை என்கிற நல்ல பெயரும் நயன்தாராவுக்கு இருந்து வருகிறது.


Post your comment





Related News
அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?
இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஆச்சரியத்தில் கோலிவுட்!
திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா? அதிர வைக்கும் தகவல் இதோ!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
ஐரா, சூப்பர் டீலக்ஸ் சென்னை வசூலில் முதல் இடத்தில் இருப்பது எது?
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions