நயன்தாராவை தயாரிப்பாளர்கள் துரத்துவதற்கு இதுதான் காரணமாம்!

Bookmark and Share

நயன்தாராவை தயாரிப்பாளர்கள் துரத்துவதற்கு இதுதான் காரணமாம்!

மாஸ் படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு, தனி ஒருவன், மாயா, நானும் ரெளடிதான், காஷ்மோரா என பல படங்கள் வெளிவரவேண்டியுள்ளன. இதுதவிர மேலும் சில தயாரிப்பாளர்களும் அவரிடம் கால்சீட் கேட்டு துரத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த படங்களில் டம்மியாக இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்திருக்கிறார். இதுதவிர, கடந்த ஓராண்டாக அனாமிகா பட பிரச்னையினால் ஆந்திர பட உலகில் ரெட் கார்டு போடப்பட்டிருந்ததால் எந்த தெலுங்கு படத்திலும் நடிக்காமல் இருந்த நயன்தாராவுக்கு இப்போது அந்த ஒரு வருட தடை நீங்கி விட்டது.

அதனால் சிரஞ்சீவி நடிக்கும் 150-வது படம் உள்பட ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். மேலும், கோலிவுட்டில் அனுஷ்கா, தமன்னா, காஜல்அகர்வால், ஹன்சிகா என பல முன்னணி நடிகைகள் இருந்தபோதும், நயன்தாராவிடம் கால்சீட் கேட்டு தயாரிப்பாளர்கள் துரத்துவதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளதாம்.

அதாவது தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நயன்தாராவுக்கு இன்னமும் நல்ல கிரேஸ் உள்ளதாம். அதனால் அவர் நடிக்கும் தமிழ் படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிடும்போது பெரிய அளவில் வசூலிக்கிறதாம். அதனால்தான், அவர் கேட்கிற சம்பளத்தைக் கொடுத்து புக் பண்ணுகிறார்களாம் கோலிவுட் படஅதிபர்கள்.

 


Post your comment





Related News
அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?
இந்த ஆண்டு மட்டும் நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸா? ஆச்சரியத்தில் கோலிவுட்!
திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா? அதிர வைக்கும் தகவல் இதோ!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
ஐரா, சூப்பர் டீலக்ஸ் சென்னை வசூலில் முதல் இடத்தில் இருப்பது எது?
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions