நயன்தாராவிற்கு குவியும் வாய்ப்புகள்

Bookmark and Share

நயன்தாராவிற்கு குவியும் வாய்ப்புகள்

எத்தனை புதுமுக நடிகைகள் வந்தாலும் நயன்தாராவிற்கு இருக்கும் 'மவுசு' இன்னும் குறையவில்லை. அவரை தங்களது ஜோடியாக நடிக்க வைக்க பல ஹீரோக்களும் முயற்சித்து வருகிறார்களாம்.

விக்ரம், அஜித், ஜீவா என அந்த பட்டியல் நீளமாகிக் கொண்டே போகிறது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்டுக்கோப்பான உடலமைப்புடன், அளவான கிளாமருடன், சிறப்பான நடிப்புடன் நயன்தாரா தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் ஏறக்குறைய முதலிடத்திலேயே இருந்து வருகிறார்.

தற்போது “நண்பேன்டா, இது நம்ம ஆளு, மாஸ், நானும் ரௌடிதான், மாயா, தனி ஒருவன்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன.

தற்போது அஜித்தின் அடுத்த படத்திலும், விக்ரமின் அடுத்த படத்திலும் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அதனால்தான் ஜீவா போன்ற நடிகர்களுடன் நடிக்க நயன்தாரா விருப்பம் காட்டவில்லை என்றும் சொல்கிறார்கள்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் நயன்தாராவை தங்களது படங்களில் நடிக்க வைக்க பாலகிருஷ்ணா போன்ற சீனியர் நடிகர்கள் பேசி வருகிறார்களாம். 30 வயதைத் தொட்டாலும் நயன்தாராவிற்கு இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதைப் பார்த்து மற்ற நாயகிகள் நிறையவே பொறமைப்பட்டு வருகிறார்களாம்.


Post your comment





Related News
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions