நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்

Bookmark and Share

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்

நயன்தாராவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவுக்கு ஏற்கனவே இரண்டு காதல்கள் தோல்வியில் முடிந்தது. முதலாவதாக சிம்புவை காதலித்தார். அது முறிந்ததும் பிரபுதேவாவை விரும்பினார். இருவரும் திருமணத்துக்கு தயாரான நிலையில் அதுவும் தோற்றது. இதனால் விரக்தியானார். இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார்.

நயன்தாராவுக்கு வயதாவதால் திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் விரும்பினர். அதற்கு நயன்தாராவும் சம்மதித்தார். மாப்பிள்ளை பார்க்கும் முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது பொருத்தமான மாப்பிள்ளையை பெற்றோர் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது.

சினிமாவில் தொடர்பு இல்லாத வரனை பார்க்கும்படி கூறி இருந்தாராம். அப்படிப்பட்டவரையே பெற்றோர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டாக்டரா? என்ஜினீயரா? தொழில் அதிபரா? போன்ற எந்த விவரமும் தெரியவில்லை. கேரளாவைச் சேர்ந்தவர் என்கின்றனர்.

மம்முட்டியுடன் மலையாள படமொன்றில் நடிக்க நயன்தாரா கேரளாவில் தங்கி இருக்கிறார். அவரும் மாப்பிள்ளையை பார்த்து விட்டார் என்கின்றனர். விரைவில் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை!
கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்!
நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்?
நயன்தாரா படத்தில் முக்கியமான ரோலில் அனுஷ்கா - எந்த படம் தெரியுமா?
செல்ஃபி இல்ல.. ஆனாலும் நயன்தாரா உடனான புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் - வைரல் புகைப்படம்!
தளபதி 63 படத்தில் தற்போது என்ன நடக்கிறது தெரியுமா? கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions