மீண்டும் திருமண கனவில் மிதக்கும் நயன்தாரா

Bookmark and Share

மீண்டும் திருமண கனவில் மிதக்கும் நயன்தாரா

நயன்தாராவின் காதல் வாழ்க்கையில் அடுத்தடுத்து சோகங்களே நிகழ்ந்தன. அவரது முதல் காதல் சிம்புவுடன் மலர்ந்தது. இருவரும் ‘வல்லவன்’ படத்தில் நடித்தபோது நெருக்கமாகி ஜோடியாக சுற்றி திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டனர். ஆனால் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன்பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது என்று இருந்த அவர் மனதை பிரபுதேவா கலைத்தார்.

விஜய்-நயன்தாராவை ஜோடியாக வைத்து ‘வில்லு’ படத்தை பிரபுதேவா இயக்கியபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த காதல் பல மாதங்கள் நீடித்தது. பட விழாக்கள் விருந்து நிகழ்ச்சிகளில் மற்றவர்களின் முணுமுணுப்புகள் பற்றி கவலைப்படாமல் ஜோடியாக கலந்துகொண்டார்கள். மனைவி, குழந்தையுடன் வாழும் பிரபுதேவாவின் குடும்பத்துக்கு நயன்தாரா துரோகம் செய்வதாக விமர்சனங்கள் கிளம்பின.

பிரபுதேவாவின் மனைவியும் தனது கணவரை விட்டு விடும்படி கண்ணீர் விட்டு கெஞ்சினார். அதனை இருவரும் பொருட்படுத்தவில்லை. நயன்தாராவை மணப்பதற்காக பிரபுதேவா மனைவியை விவாகரத்து செய்தார். நயன்தாராவும் காதலின் வலிமையை உணர்த்த கிறிஸ்தவ மதத்தில் இந்து மதத்துக்கு மாறினார்.

இருவரும் திருமணத்தை ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்து அழைப்பிதழ் அச்சடிப்பது, திருமண நகைகள், துணிமணிகள் எடுப்பது என்ற திட்டமிடலில் இருந்தபோது அவர்கள் காதல் எதிர்பாராமல் முறிந்து போனது.

இருவரும் காரணம் சொல்லாமலேயே பிரிந்து விட்டனர். அதன்பிறகு இனிமேல் தனக்கு காதலே இல்லை என்ற முடிவில் இருந்த நயன்தாரா வாழ்க்கையில் மூன்றாவது காதலராக டைரக்டர் விக்னேஷ் சிவன் நுழைந்து இருக்கிறார். இருவருக்கும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் துளிர்த்ததாக கூறப்பட்டது.

தற்போது அவர்கள் ஜோடியாக சுற்றி காதலை வளர்த்து வருகிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களிலும் வெளியிடுகின்றனர். ஓணம் பண்டிகையை கேரளாவுக்கு சென்று கொண்டாடினார்கள். இருவருக்கும் ரகசியமாக திருமணம் முடிந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டு பிறகு அது மறுக்கப்பட்டது.

விக்னேஷ் சிவன் தாடியுடன் பிரபுதேவாவைப்போல் இருப்பதாலேயே நயன்தாராவை கவர்ந்து இருக்கிறார் என்று பட உலகில் பேச்சு உள்ளது. இந்த காதலும் முறிந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதில் நயன்தாரா கவனமாக இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் குடும்பத்தினரை தனது வீட்டுக்கு அழைத்து சமீபத்தில் விருந்து கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்போது நயன்தாராவின் அன்பான உபசரிப்பில் அனைவரும் ஈர்க்கப்பட்டு அவர்தான் தங்கள் வீட்டுக்கு மருமகளாக வரவேண்டும் என்று முடிவு எடுத்தார்களாம்.

நயன்தாரா மார்க்கெட் தற்போது உச்ச நிலையில் இருக்கிறது. ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக திருமணம் இருக்காது என்று தெரிகிறது. ஆனாலும் விக்னேஷ் சிவனை மணக்க வேண்டும் என்ற திருமண கனவில் உறுதியாக இருக்கிறார். அடுத்த வருடம் இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment

Related News
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
நயன்தாராவுக்கு நெருக்கமான தோழியான தமன்னா
பெண் சிசுக்கொலை கதையா? - நயன்தாராவின் இன்னொரு திகில் படம்
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions