நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே!

Bookmark and Share

நயன்தாராவை தொடர்ந்து தர்பாரில் இணைந்த இன்னொரு பிரபலம் – வைரலாகும் புதிய புகைப்படம் உள்ளே!

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இதன் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி நயன்தாராவுடன் யோகி பாபுவும் இப்படத்தில் நேற்று இணைந்துள்ளாராம்.

இவரும் ரஜினியும் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பேட்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அதேபோல் பேட்ட செண்டிமெண்ட் காரணமாக தர்பார் படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions