பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

Bookmark and Share

பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள், நடிகைகள் தங்களது பெயர்களை சினிமாவிற்கு ஏற்றது போல மாடர்னாக மாற்றி கொள்வது வழக்கம் தான். அப்படி தான் சூர்யா, விஜய் போன்ற நடிகர்கள் தங்களது பெயர்களையும் மாற்றி கொண்டனர்.

இவர்கள் மட்டுமல்லாமல் இன்று லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா முதல் சினேகா, தமனா, ரம்பா, சிம்ரன், குஷ்பூ மற்றும் பல நடிகைகளும் தங்களது பெயர்களை மாற்றி கொண்டுள்ளனர்.

தற்போது அவர்களின் உண்மையான பெயர்கள் என்னவென்று தெரிய வந்துள்ளன,அவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க.

இவர்கள் மட்டுமல்லாமல் இன்று லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா முதல் சினேகா, தமனா, ரம்பா, சிம்ரன், குஷ்பூ மற்றும் பல நடிகைகளும் தங்களது பெயர்களை மாற்றி கொண்டுள்ளனர்.

தற்போது அவர்களின் உண்மையான பெயர்கள் என்னவென்று தெரிய வந்துள்ளன,அவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க.

Tamannaah - Tamannaah Bhatia(தமனா பாடியா)

தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தமன்னா, பாகுபலி படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் வேற லெவலுக்கு சென்று விட்டது, தமனா பாடியா என்பது தான் இவருடைய ஒரிஜினல் பெயராம்.

simran - Simran Bagga (சிம்ரன் பக்கா)

பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அஜித், விஜய் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் சிம்ரன், இவருடைய பெயர் சிம்ரன் பக்கா என்பது தானாம், அதை சிம்ரன் என சுருக்கி கொண்டுள்ளார்.

rambha - Vijayalakshmi(விஜயலக்ஷ்மி)

1990-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் ரம்பா, தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார், இவருடைய பெயர் விஜயலக்ஷ்மி தானாம்.

asin - Asin Thottumkal (அசின் தொட்டும்கல்)

விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடித்து தற்போது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார் அசின், இவரது உண்மையான பெயர் அசின் தொட்டும்கல் என்பதாம்.

kushboo - Nakhat Khan (நகத் கான்)

1980-களில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருந்தவர் குஷ்பூ, இவருக்காக ரசிகர்கள் கோவில் கட்டிய கதையெல்லாம் உண்டு என்பது அனைவரும் அறிந்தது. இந்த பெருமைக்கெல்லாம் சொந்தக்காரியான குஷ்பூவின் பெயர் நகத் கான் என்பது தானாம்.

ramya krishnan - Pasupuleti Ramya (பசுபுலிட்டி ரம்யா)

ரஜினியின் படையப்பா படத்தில் பவர்புல் வில்லியாக நடித்து பல ஆயிரம் ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா கிருஷ்ணா, இவர் பாகுபலி படத்தில் நடித்து மேலும் புகழின் உச்சிக்கு சென்று விட்டார், இவருடைய உண்மையான பெயர் பசுபுலிட்டி ரம்யா என்பது தானாம்.

sadha - Sadaf Mohammed Sayed (சதாப் முகமத் சயிட்)

ஜெயம் ரவி, சதா ஆகிய இருவரும் ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகமாகினர், இந்த படம் இருவருக்குமே மிக பெரிய மைல் கல்லாக அமைந்திருந்தது அனைவரும் அறிந்தது தான், இந்த சதாவின் உண்மையான பெயர் சதாப் முகமத் சயிட்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions