நயன்தாராவால் மதம் மாறிய விக்னேஷ் சிவன்

Bookmark and Share

நயன்தாராவால் மதம் மாறிய விக்னேஷ் சிவன்

நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு பிஎம்டபிள்யூ காரும், பெசன்ட் நகரில் வீடும் வாங்கிக் கொடுத்தார்.

மேலும் பரிசுப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை இருவரும் காதலை உறுதி செய்யவில்லை. 

இப்போது இருவரும் காதலில் நெருக்கமாகி திருமணத்திற்கு தயாராகி விட்டார்கள் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். ஏற்கனவே, இயக்குனர் பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார். 

அதன்பின் அந்த காதல் முறிந்ததும், மீண்டும் தனது தாய் மதத்திற்கே திரும்பினார். சமீபத்தில் ரோம் சென்ற நயன்தாரா போப்பிடம் ஆசி பெற்றார். அப்போது நயன்தாராவுடன் சென்றிருந்த விக்னேஷ் சிவன், ரோமிலேயே கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டார் என்ற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது. 
விக்னேஷ் சிவன் தனது பெயரை விக்டர் என்று மாற்றிக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவனை எல்லோரும் விக்கி என்று அழைக்கிறார்கள்.

விக்டர் என்ற பெயரையும் சுருக்கமாக விக்கி என்று அழைக்கலாம். எனவே இந்த பெயர் அவருக்கு பொருத்தமாகவும் அழகாகவும் இருக்கும் என்று நயன்தாரா நினைத்ததால் விக்னேஷ் சிவன் இப்போது விக்டர் ஆனார் என்று கூறப்படுகிறது. 


Post your comment





Related News
விரைவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?
100 படங்கள் முடித்த பிறகே நயன்தாரா திருமணம்
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?
தளபதி விஜயை பல ஆண்டுகள் காக்க வைத்த பிரபலம் - யார்? ஏன் தெரியுமா?
அதுக்கு டைம் இல்ல இதுக்கு மட்டும் இருக்கோ?: விக்னேஷ் சிவனை வறுத்தெடுக்கும் சூர்யா ரசிகர்கள்
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions