இரட்டை வேடத்தில் நடிக்கும் நீது சந்திரா

Bookmark and Share

இரட்டை வேடத்தில் நடிக்கும் நீது சந்திரா

‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷாஜி கைலாஸ். இந்த இரண்டு படங்களிலும் ஆர்.கே. கதாநாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் ஆர்.கே.- ஷாஜி கைலாஸ் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகவிருக்கிறது.

இப்படத்திற்கு ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதன் பூஜை வருகிற 16-ந் தேதி ஏ.வி.எம். திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் நீது சந்திரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருடன். இனியா, சுஜா வாருண்ணி, கோமல் சர்மா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை ஆர்.கே. பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

நீது சந்திரா நடிப்பில் கடைசியாக ‘அமீரின் ஆதி-பகவன்’ படம் வெளிவந்தது. இப்படத்தில் நீது சந்திரா வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் ‘சேட்டை’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடிக்கவிருக்கும் இந்த படம் அவருக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், ‘திலகர்’ என்ற படத்திலும் நீது சந்திரா நடித்து வருகிறார். 


Post your comment





Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions