பிரகாஷ்ராஜுக்கு குவியும் பாராட்டு

Bookmark and Share

பிரகாஷ்ராஜுக்கு குவியும் பாராட்டு

கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் பிரகாஷ்ராஜ். சமீபகாலமாக அதிகமான படங்களில் நடிக்காமல் இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் வரை எந்தப் படத்தை எடுத்தாலும் அதில் அவர்தான் வில்லனாக இருப்பார். இப்போது புதிது புதிதாக மும்பையிலிருந்து வில்லன்களையும் நமது இயக்குனர்கள் அறிமுகப்படுத்துவதால் பிரகாஷ்ராஜ் போன்றோர் குணச்சித்திரம் பக்கம் பார்வையைத் திருப்பி விட்டார்கள்.

கடந்த வாரம் வெளிவந்த 'ஓ காதல் கண்மணி' படத்தில் ஒரு அற்புதமான குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் பிரகாஷ்ராஜ்.

கணபதி என்ற ஒரு 60 வயதைக் கடந்த வயதான ஒரு கதாபாத்திரத்தில் பாசமான கணவனாக நடித்து அனைவரையும்  கண்கலங்க வைத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். காதல் என்பது வயதைக் கடந்தும், காமத்தைக் கடந்ததும் இருக்கும் ஒரு விஷயம் என அவரது கதாபாத்திரம் மூலம் உணர்த்தியிருப்பார் மணிரத்னம்.

கணபதி கதாபாத்திரத்தில் தன்னுடைய ஓவர் ஆக்டிங் நடிப்பையெல்லாம் ஓரம் தள்ளி வைத்து விட்டு ஒரு யதார்த்தமான, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய பிரகாஷ்ராஜை திரையுலகத்தினரும், ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.

பிரகாஜ்ராஜ் மனைவியாக நடித்துள்ள லீலா சாம்சனும் அவ்வளவு யதார்த்தமாக நடித்திருப்பார். உண்மையில் படத்தில் உள்ள இளம் காதல் ஜோடிகளான துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரை விட பிரகாஷ்ராஜ் - லீலா சாம்சன் ஜோடிதான் பலரையும் கவர்ந்துள்ளது. பிரகாஷ்ராஜின் நடிப்பு நிச்சயம் தேசிய விருதுக்குரிய நடிப்பு என்று தாராளமாகச் சொல்லலாம்.

 


Post your comment





Related News
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ!
ஒரு கை பார்க்கலாம்.. துணிந்து சிவகார்த்திகேயனோடு மோதும் விஜய் தேவரகொண்டா!
கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா? ரசிகர்களுக்கு செம விருந்து!
ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்!
தளபதி 64 படத்தை இயக்க போவது இவரா? - இளம் இயக்குனருக்கு டிக்கடித்த விஜய்?
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
கிரிக்கெட் விளையாடியதால் விஜய் தேவரகொண்டாவுக்கு வந்த விபரீதம் – என்ன தெரியுமா?
பொன்னியின் செல்வனில் நடிக்க நோ சொன்ன பிரபல நடிகர் – அவரே சொன்ன தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions