மீண்டும் இணைகிறது ஓகேஓகே கூட்டணி!

Bookmark and Share

மீண்டும் இணைகிறது ஓகேஓகே கூட்டணி!

தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா  நடித்த  ஆதவன் படத்தில் ஒரேயொரு காட்சியில் தலையைக்காட்டினார். அடுத்து, எம்.ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவானார்.  

இப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான காமெடி கேரக்டரில் நடித்தார் சந்தானம். அவரது பங்களிப்பு ஓகேஓகே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் உதயநிதி அடுத்த நடித்த இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா ஆகிய இரண்டு படங்களிலும் சந்தானத்தையே காமெடியனாக நடிக்க வைத்தார்.

நண்பேன்டா படப்பிடிப்பு நடைபெற்றபோது நயன்தாரா விவகாரத்தில் சந்தானம் உதயநிதி இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

அதை உண்மையாக்குவதுபோல், தனது மூன்று படங்களுக்குப் பிறகு சந்தானத்தைவிட்டு பிரிந்தார் உதயநிதி. அவர் தற்போது நடித்து வரும் கெத்து, இதயம் முரளி என இரண்டு படங்களிலும் சந்தானம் நடிக்கவில்லை. இவ்விருபடங்களில் கருணாகரன், தம்பி ராமையா என வேறு காமெடியன்களை நடிக்க வைத்துள்ளார்.  

இந்நிலையில் தனது வெற்றிக்குக் காரணமான இயக்குனர் ராஜேஷ் மற்றும் சந்தானத்துடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறாராம் உதயநிதி.  

வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கிவரும் எம். ராஜேஷ் அடுத்து இயக்கும் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்க உள்ளார்.


Post your comment





Related News
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
புரூஸ் லீ இயக்குனருடன் இணைந்த அசோக் செல்வன்
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions