ரஜினி, விஜய் வரிசையில் இணைந்த ஓவியா – வெளிவந்த மாஸான அப்டேட்!

Bookmark and Share

ரஜினி, விஜய் வரிசையில் இணைந்த ஓவியா – வெளிவந்த மாஸான அப்டேட்!

தமிழ் சினிமாவில் 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் களவாணி. அமைதியாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை ருசித்த இப்படத்தின் இரண்டாம் பாகம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தயாராகி வருகிறது.

முதல் பாகத்தை இயக்கிய சற்குணமே இயக்க விமல், ஓவியா ஆகியோர் இதிலும் கதை மாந்தர்களாக நடிக்கிறார்கள்.இதற்கிடையில் நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்திருப்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படம் ஜுன் 28-ம் தேதி வெளியாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல ஜீ நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிறுவனம்தான் மெர்சல், 2.0 படங்களின் உரிமையையும் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கடைசியாக வெளியான 90 எம்.எல் படம் வணிக ரீதியாக தோல்வியுற்ற நிலையில் இந்த படமாவது ஓவியாவிற்கு வெள்ளித்திரையில் வெற்றியை தேடி தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Post your comment





Related News
முதல்வன் 2 படத்திற்காக இணைந்த இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் - ஆரம்பமே இப்படியொரு அதிரடியா?
இந்தியன் 2 போனால் என்ன? காஜலுக்கு அடித்தது ஜாக்பாட்!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions