கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது

Bookmark and Share

கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந் தேதி மாலை மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதற்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது.

வருகிற 11-ந் தேதி பிரசித்தி பெற்ற பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எரிமேலியில் நடைபெறுகிறது. மேலும் மகரவிளக்கு பூஜை அன்று சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் ஊர்வலமாக 14-ந் தேதி சன்னிதானத்திற்கு எடுத்துவரப்படும்.

இந்த ஆபரணங்களை சுவாமி அய்யப்பனுக்கு அணிவித்து தீபாராதனை காட்டி மகரவிளக்கு பூஜை நடைபெறும். அதே சமயம் அங்குள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

மகரவிளக்கு பூஜை காலத்தில் கேரள அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் பற்றிய சிறப்புகளை பரப்பும் கலைஞர்களை கவுரவப்படுத்தும் விதத்தில் அரிவராசனம் விருது வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்படுகிறது. வருகிற 17-ந் தேதி சபரிமலை சன்னிதானத்தில் உள்ள கலையரங்கில் நடைபெறும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. விருதுபெறும் கலைஞருக்கு ரூ.1 லட்சம் பரிசும் கிடைக்கும்.

இந்த தகவலை கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு அரிவராசனம் விருதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன் போன்றோரும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment

Related News
என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்!
காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்?
அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி!
பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்!
தர்பாரில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை – யார் தெரியுமா?
பிக் பாஸ் 3-ல் இணைந்த நேர்கொண்ட பார்வை நடிகை; யார் தெரியுமா?
சூர்யா ரசிகர்களுக்கு செமத்தியான காப்பான் அப்டேட் – பார்த்து எஞ்சாய் பண்ணுங்க!
அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்!
அமலா பால் டிரெஸ் போட்ருங்காங்களா இல்லையா? அட பாவிங்களா.. இதிலையும் விவாதமா?
அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா? சூப்பர் அப்டேட்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions