ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்

Bookmark and Share

ரஞ்சித்துடன் இணைய ஆசைப்படும் பாலிவுட் நடிகர்

பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் அநுராக் காஷ்யப். பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிற முனைப்பில் இருக்கும் அவர், 

பாலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிற தமிழ் இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்து பேசியிருப்பது இந்தி சினிமாவில் பேசு பொருளாகி இருக்கிறது. சமீபத்தில் 'காலா' 'பரியேறும் பெருமாள்' படங்களை பார்த்த இயக்குனர் அனுராக் . 

இயக்குனர் இரஞ்சித்தை சந்திக்க வரச் சொல்லி அழைப்பு  விடுத்திருக்கிறார்.  இதனையடுத்து மும்பையில் இரஞ்சித்துக்கு அனுராக்   விருந்தளித்திருக்கிறார்.
இந்த சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படம் குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழிற்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார். 

மேலும் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் குறித்தும் சிலாகித்து பேசியவர்.... இந்திய சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு, வர்க்கம் , பெண்ணடிமைத்தனம் குறித்து கலைஞர்களுக்கு சரியான புரிதல் வேண்டும். 

 கலைஞர்கள் அதை கவனத்தில் கொள்ளவேண்டும். நாம்  செய்யவேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. "இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார் அநுராக் காஷ்யப்.

இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் பா.இரஞ்சித், "உண்மையிலேயே அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. " காலா", "பரியேறும் பெருமாள்" குறித்து அவர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம் என்றும் கூறியிருக்கிறார்" என்று உற்சாகமாக கூறினார்.


Post your comment





Related News
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?
விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஒன்றல்ல இரண்டு விருந்து உள்ளதாம்.
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் - நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரின் உருக்கமான டிவீட்!
சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா? முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி!
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions