விவசாயிகளுக்காக அரசை எதிர்கும் பவன் கல்யாண்

Bookmark and Share

விவசாயிகளுக்காக அரசை எதிர்கும் பவன் கல்யாண்

ஆந்திர மாநிலத்திற்காக புதிய தலைநகரம் அமைக்க உள்ள பகுதியில் சில விவசாயிகள், தங்களுக்கு விருப்பமில்லாமலேயே விவசாய நிலங்களை ஆந்திர அரசு அபகரிக்கிறது என குற்றம் சாட்டினர்.

இதனிடையே ஜனசேனா கட்சியின் தலைவரும் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான பவன் கல்யாண் இப்பிரச்சினையில் தலையிட்டு தங்களது விவசாய நிலங்களை காப்பாற்ற வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் ஊர்வலம் நடத்தி தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற பவன் கல்யாண், கடந்த மாதம் தலைநகர் அமைய உள்ள குண்டூர் மாவட்டம் தூளூரு, உண்டவல்லி, எர்ர பாளையம், பேத்தபுடி ஆகிய கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்களை அபகரித்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என பவன் கல்யாண் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டால் தான் எப்பொழுதும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அரசை எதிர்த்து போராட தயாராகவும் இருப்பேன் என டுவிட்டரில் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions