பேட்ட டிரைலரை புத்தாண்டில் வெளியிட படக்குழு திட்டம்

Bookmark and Share

பேட்ட டிரைலரை புத்தாண்டில் வெளியிட படக்குழு திட்டம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிவுற்று, தணிக்கை அதிகாரிகளுக்குத் திரையிட்டு காட்டினார்கள். அவர்கள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க சந்தோ‌ஷம் அடைந்துள்ளது படக்குழு. இதனைத் தொடர்ந்து ‘பேட்ட பொங்கல் பராக்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தணிக்கைப் பணிகள் முடிவடைந்துள்ளதால், முழுமையாக விளம்பரப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தின் டிரெய்லரை புத்தாண்டுக்கு வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு. ’பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், திரிஷா, நவாசுதின் சித்திக், சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராமதாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 


Post your comment





Related News
”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று!
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
பேட்ட ஒரு நாள் ஹிட்ஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது, நம்பர் 1 இடத்தில் ரஜினி
பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் மோதல் - தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்
ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions