சீனாவில் வரலாறு படைத்த அமீர் கானின் பி.கே. படம் - ரூ. 100 கோடியை தாண்டியது வசூல்

Bookmark and Share

சீனாவில் வரலாறு படைத்த அமீர் கானின் பி.கே. படம் - ரூ. 100 கோடியை தாண்டியது வசூல்

சீனாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டியிருக்கும் அமீர் கானின் பி.கே. படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பி.கே. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் 3-இடியட்ஸ் புகழ் ராஜ் குமார் ஹிராணி. இந்த ஜோடியின் 3-இடியட்ஸ் படமும் அந்நாட்டில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது. 

கடந்த மாதம் மே 24-ம் தேதி சீனாவில் உள்ள 5,400 திரையரங்குகளில் பி.கே. படம் வெளியிடப்பட்டது. கடவுள் நம்பிக்கை அற்ற தேசமான சீனாவில் மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்யும் இந்த படம் என்ன மாதிரியான வரவேற்பை பெறும் குழப்பம் நிலவியது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மூன்றே நாட்களில் ரூ. 35 கோடி வசூல் செய்து சாதனைப்படைத்தது. 

இந்நிலையில் வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் படி இதுவரை இப்படம் 101.84 கோடி வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் பல திரையரங்குகளில்  பி.கே. படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இது இந்திய சினிமாவில் இதுவரை எந்த படமும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions