நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என நிறுபித்த ஜீவா, சிபிராஜ்!

Bookmark and Share

நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என நிறுபித்த ஜீவா, சிபிராஜ்!

பிடிஎஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மோத்வானி, அறிமுக நாயகி மானஸா, மனோபாலா, சித்ரா லட்சுமணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துவரும் படம் “போக்கிரி ராஜா”.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் எனும் வெற்றிப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான ராம்பிரகாஷ் ராயப்பா இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பாண்டிச்சேரியில் கொட்டும் மழையிலும் இடைவிடாது நடைபெற்று வந்தது.

அப்போது சுற்றி நின்றிருந்த மக்கள் கூட்டத்தில் ஹன்சிகா சிக்கிக்கொண்டார். அவரை படத்தின் நாயகன் ஜீவாவும், சிபிராஜும் கூட்டநெரிசலில் இருந்து மீட்டு பத்திரமாக கேரவானுக்குள் அனுப்பி வைத்தனர். ஜீவா மற்றும் சிபிராஜின் இந்த உதவியால் நெகிழ்ந்த நாயகி ஹன்சிகா இருவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் போக்கிரி ராஜா படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியை தொடர்ந்து அடுத்து சென்னையிலும் நடைபெற உள்ளது.

இப்படத்திற்கு இசை – டி.இமான்; ஒளிப்பதிவு – ஆஞ்சநேயலு; கலை – வனராஜா; எடிட்டிங் – சாபு; கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ராம்பிரகாஷ் ராயப்பா

 


Post your comment





Related News
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!
ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.!
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions